சர்பராஸ் கான் தம்பி லெவல் என்ன தெரியுமா?.. உள்ள வந்தப்பயே உணர்ந்தோம்- சர்துல் தாக்கூர் பேச்சு

0
188
Musheer

இந்தியாவில்பெரிய உள்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கிரிக்கெட் தொடரின் இந்த ஆண்டுக்கான சீசன் நேற்று நடைபெற்று முடிவுக்கு வந்தது. விதர்பா அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் விளையாடிய மும்பை அணி 42வது முறையாக ரஞ்சி டிராபி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் மும்பை மிகவும் தடுமாறிக் கொண்டிருந்த பொழுது 69 ரன்களில் சர்துல் தாக்கூர் அதிரடியாக 75 ரன்கள் எடுத்தார். இதுவே இந்த ஆட்டம் முதலில் மும்பை பக்கம் வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தது. மேலும் சர்துல் தாக்கூர் அரையிறுதியிலும் அதிரடியாக இறுதிக்கட்டத்தில் வந்து முக்கியமான நேரத்தில் சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதற்கு அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் சர்ப்ராஸ் கானின் தம்பியான 18 வயதான முசிர் கான் மிகச் சிறப்பாக விளையாடிய 136 ரன்கள் குவித்தார். அதன் காரணமாக மிகப்பெரிய இலக்கை விதர்பா அணிக்கு கொடுத்து 169 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, ரஞ்சி சாம்பியன் பட்டத்தை மும்பை கைப்பற்றியது.

மும்பை அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் சிவம் துபே சிறிய காயம் காரணமாக, ரஞ்சி டிராபி நாக் அவுட் சுற்றில் இருந்து முழுமையாக வெளியேறினார். இதன் காரணமாக சர்ப்ராஸ் கான் தம்பி முசிர் கானுக்கு முதல் முறையாக மும்பை அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது.

இந்த வாய்ப்பை மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட முசிர் கான் காலிறுதியில்ஆட்டம் இழக்காமல் இரட்டை சதம், அரையிறுதியில் அரைசதம், இறுதிப் போட்டியில் சதம் என அட்டகாசப்படுத்தியதோடு, பந்து வீச்சிலும் சில முக்கியமான விக்கெட்டுகளை கைப்பற்றி மும்பை அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தார்.

- Advertisement -

முசிர் கான் உயர்மட்ட வீரர் :

இவரைப் பற்றி சர்துல் தாக்கூர் பேசும் பொழுது “நம்முடைய அணிகளில் இருக்கும் வீரர்களை பார்ப்பதற்கு உண்மையிலேயே மிகவும் ஆச்சரியமாக இருக்கிறார்கள். முசிர் திறமையை வெளிப்படுத்திய விதத்தை பார்க்கும் பொழுது அவ்வளவு ஆச்சரியமாக இருந்தது. அவர் ரஞ்சி டிராபியில் நுழைந்த பொழுதே அவர் ஏற்கனவே தயாராகி விட்டார் என்பதை நாங்கள் உணர்ந்தோம்.

இதையும் படிங்க : பெங்களூரில் பயிற்சியில் ஆர்ச்சர்.. ஆர்சிபி அணியில் இணைகிறாரா?.. குழப்பத்திற்கு கிடைத்த பதில்

அவர் சென்சில் தயாரான விதம், பந்துவீச்சாளர்களை எதிர் கொள்ள தயாரான விதம் எல்லாம் சேர்ந்து அவர் நிலைமைகளை மிகச் சரியாகப் புரிந்து கொண்ட இளம் வீரராக இருக்கிறார். உயர் மட்ட கிரிக்கெட்டை விளையாடுவதற்கான எல்லா திறமைகளும் இந்த இளைஞரிடம் இருக்கிறது” என்று மிகவும் புகழ்ந்து பாராட்டி பேசி இருக்கிறார்.