தனியாளாக போராடிய ஸ்டோக்ஸ்.. மாஸ் காட்டிய இந்திய பவுலர்கள்.. பாஸ்பால் இங்கிலாந்து சுருண்டது

0
385
ICT

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஓட்டத்தில் இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மிகவும் முக்கியத்துவம் பெற்ற தொடராக இருக்கிறது.

இன்று இந்தத் தொடரின் முதல் போட்டி ஹைதராபாத்தில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் துவங்கி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. தாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு துவக்க ஜோடி 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. பென் டக்கெட் 35, ஜாக் கிரவுலி 20 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். இதற்கு அடுத்து வந்த போப் 1 ரன் எடுக்க 60 ரன்களில் மூன்று விக்கெட்டுகளை இங்கிலாந்து இழந்தது.

இதற்கு அடுத்து வந்த ஜோ ரூட் 29 மற்றும் ஜானி பேர்ஸ்டோ 37 ஓரளவுக்கு தாக்கு பிடித்தார்கள். மதிய உணவு இடைவேளை முடிந்து வந்த இவர்கள் இருவரையும் ஜடேஜா மற்றும் அக்சர் படேல் வெளியேற்றினார்கள்.

இதற்கு அடுத்து பென் போக்ஸ் 4, ரேகான் அஹமத் 13, டாம் ஹார்ட்லி 23, மார்க் வுட் 11 என ஒருபுறம் வரிசையாக வெளியேற, மிகச் சிறப்பாக விளையாடிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 69 பந்துகளில் அரை சதம் அடித்து கலக்கினார்.

- Advertisement -

சிறப்பாக தனி ஆளாக நின்று போராடிய கேப்டன் ஸ்டோக்ஸ் பத்தாவது விக்கெட்டாக 88 பந்துகளில் ஆறு பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் 70 ரன்கள் எடுத்து பும்ரா பந்தில் கிளீன் போல்ட் ஆனார். 64.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இங்கிலாந்து 246 ரன்கள் எடுத்திருக்கிறது.

இந்திய பந்து வீச்சு தரப்பில் ஜடேஜா மூன்று, அஸ்வின் மூன்று, அக்சர் மற்றும்
பும்ரா இருவரும் தலா இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். ஸ்டோக்ஸ் கேப்டன் ஆகவும் மெக்கலம் பயிற்சியாளராகவும் இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு வந்த பிறகு, அவர்கள் அதிரடியாக விளையாடும் வாஸ் பால் முறை இந்தியாவில் தற்பொழுது எடுபடவில்லை.

இதையும் படிங்க : “490/9 டிக்ளர்.. அட என்ன இப்படி ஆகிப்போச்சு?” – பீட்டர்சனின் வைரலாகும் ட்விட்.. பரிதாபம்

இந்த ஆடுகளம் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக காணப்படுகிறது. இந்த நிலையில் இன்று இந்தியா மேற்கொண்டு குறைந்தபட்சம் 20 ஓவர்ளாவது விளையாடுவதற்கு வாய்ப்புகள் உண்டு. இந்த ஓவர்களை விக்கெட் விடாமல் பயன்படுத்துவதை விட புதிய பந்தில் ரன்கள் எடுப்பது முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது.