“490/9 டிக்ளர்.. மறுபடியும் ரெண்டு நாளா?” – பீட்டர்சனின் 2 மணிநேர வைரலாகும் ட்வீட்

0
216
Pieterson

இந்திய இங்கிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி என்ன மாதிரியான அணுகுமுறைகள் விளையாடும் என்று ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருந்த இந்தத் தொடர் இன்று ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

- Advertisement -

பந்து பெரும்பாலும் ஆடுகளத்தில் தரையிறங்கும் இடம் மிகவும் காய்ந்து காணப்பட்டது. இதன் காரணமாக பந்து முதலில் இருந்து சுழன்று திரும்ப போவது உறுதியாக விஷயமாக இருந்தது.

முதல் எட்டு ஓவர்களில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களிடம் பாஸ்பால் முறையில் அதிரடி காட்டிய இங்கிலாந்து துவக்க ஜோடி 55 ரன்கள் சேர்த்தது. இதற்கடுத்து ரோஹித் சர்மா சுழற் பந்துவீச்சாளர்களை கொண்டு வந்தார்.

இங்கிலாந்தின் துவக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் விக்கெட்டை வீழ்த்தி இங்கிலாந்துக்கு சரிவை ஏற்படுத்தினார். தற்பொழுது இங்கிலாந்து 60 ஓவர்களுக்கு 150 ரன்களை 7 விக்கெட் இழப்புக்கு எடுத்திருக்கிறது. பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக வந்த பிறகு இதுதான் அவர்களுடைய மிக மெதுவான இன்னிங்ஸ் ஆக அமைந்தது.

- Advertisement -

இந்த நிலையில் இங்கிலாந்து துவக்க ஆட்டக்காரர்கள் இந்திய வேகப்பந்துவீச்சை அதிரடியாக விளையாடி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நேரத்தில், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், இங்கிலாந்து முதல் நாளில் 450 ரன்களை 9 விக்கெட் இழப்புக்கு எடுத்து அதிரடியாக டிக்ளேர் செய்யும் என ட்விட் செய்திருந்தார்.

இதையும் படிங்க : “பாஸ்பாலா?.. அந்த வார்த்தையை முதல்ல மெக்கலம் வெறுக்கிறார்.. காரணம் இதான்” – ஸ்டோக்ஸ் வெளியிட்ட தகவல்

இதற்கு அடுத்த இரண்டு மணி நேரத்தில் இங்கிலாந்து சரிந்த விதத்தையும் ஆடுகளத்தையும் பார்த்த அவர் மிகவும் ஏமாற்றமாகி ” மோசம் இது இரண்டு நாள் ஆட்டமாகத்தான் இருக்க போகிறது” என்று வருத்தமாக பதிவிட்டு இருக்கிறார். தற்பொழுது சமூக வலைதளத்தில் இது வைரலாக கிரிக்கெட் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.