“விளையாடும் முன்னவே தவறு செஞ்சுட்டிங்க ஸ்டோக்ஸ்.. இப்படி பண்ணி இருக்கக்கூடாது” – நாசர் ஹூசைன் கருத்து

0
157
Nasser

தற்போது இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். வழக்கம்போல் இந்த ஆடுகளமும் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாகவே தயாரிக்கப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

இந்திய அணியில் அக்சர் பட்டேல் உடன் மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் மற்றும் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்று இருக்கிறார்கள். வேகப்பந்து வீச்சில் பும்ரா மற்றும் சிராஜ் இருவரும் இடம் பெற்று இருக்கிறார்கள்.

அதே சமயத்தில் இங்கிலாந்தை எடுத்துக் கொண்டால் இந்தியாவைப் போலவே மூன்று சுழற் பந்து வீச்சாளர்களை வைத்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட்டை மட்டுமே வைத்து இருக்கிறார்கள்.

இங்கிலாந்து அணியின் முதல் நிலை வேகப்பந்துவீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சனை அவர்கள் அணியில் சேர்க்கவில்லை. இந்தியாவில் அவர் நல்ல செயல் திறனை வெளிப்படுத்திய போதும் ஸ்டோக்ஸ் எடுத்த முடிவு ஆச்சரியம் அளிக்க கூடியதாக இருக்கிறது.

- Advertisement -

இந்திய சூழ்நிலையில் இங்கிலாந்தின் அனுபவமற்ற சுழற் பந்துவீச்சு தாக்குதல் தோல்வி அடையும் பொழுது, பந்து தேய்ந்து இருந்தால் ஆண்டர்சன் ரிவர்ஸ் ஸ்விங் மூலம் விக்கெட்டுகளை கைப்பற்றும் திறன் படைத்தவர். இந்தியாவில் இங்கிலாந்து அதை அதிகம் நம்பி இருந்தது. இந்த நிலையில் தான் அவர் அணியில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

இதுகுறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் உசேன் கூறும் பொழுது ” தற்பொழுது அனுபவம் இல்லாத சுழற் பந்துவீச்சுப்படை இருப்பதால் நான்கு சுழற் பந்துவீச்சாளர்களை கொண்டு சென்று இருக்கிறார்கள் போல. இருந்தாலும் இங்கிலாந்துக்கு வெளிப்படையாக லீச் இருக்கிறார். ஆனால் அவர் ஜூலையில் இருந்து பந்து வீசவில்லை. அனுபவம் இல்லாத இரண்டு இளம் சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் கொஞ்சம் சமநிலையுடன் சென்று இருக்கலாம்.

இதையும் படிங்க : “இன்னைக்கு இது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.. எனக்கு இதுதான் முதல் தடவை” – கேப்டன் ரோஹித் சர்மா பேச்சு

ஜிம்மி ஆண்டர்சன் எங்களின் சிறந்த வீரர். அப்படிப்பட்ட ஒரு வீரரை விட்டு விட்டுப் போவது சரியானது கிடையாது. மேலும் அவருக்கு இந்திய சூழ்நிலைகளில் நல்ல வெற்றி இருந்திருக்கிறது. நான் அவரை வைத்து சமநிலையான ஒரு அணியை விரும்புகிறேன். விக்கெட் திரும்ப போகிறது என்று அவர்கள் மூன்று சுழற் பந்துவீச்சாளர்களுடன் சென்று விட்டார்கள்” என்று கூறி இருக்கிறார்.