இனியும் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை விராட்கோலி முறியடிப்பார் என்று நம்புகிறீர்களா? – கேள்விக்கு ரிக்கி பண்டிங் கொடுத்த அட்டகாசமான பதில்!

0
156

சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை விராட் கோலி முறியடிப்பார் என்று சமீபத்திய பேட்டியில் ரிக்கி பாண்டிங் கூறியிருக்கிறார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு முன்பு, 2019ம் ஆண்டு, விராட் கோலி 70வது சதத்தை பூர்த்தி செய்தார். 1000 நாட்களாக சதம் அடிக்காமல் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானர் விராட் கோலி. ஆசிய கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது, சிறப்பாக விளையாடி தனது 71வது சதத்தை பூர்த்தி செய்து நிம்மதி பெருமூச்சு விட்டார்.

- Advertisement -

இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை சச்சின் டெண்டுல்கரின் சர்வதேச 100 சதங்கள் சாதனையை முறியடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால், தற்போது விராட் கோலிக்கு இந்திய அணியில் போதிய அளவிலான நாட்கள் இல்லை என்றும், மீதம் 30 சதங்கள் இருப்பதால், அதற்குள் அவர் 100 சதங்கள் சாதனையை முறியடிப்பது மிகவும் கடினம் என்றும் பல்வேறு பட்ட கருத்துக்கள் வெளி வருகின்றன.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 70 சதங்கள் அடித்துள்ள ரிக்கி பாண்டிங் (சமீபத்தில் இவரது சாதனையை விராட் கோலி முறியடித்தார்), நிச்சயம் விராட் கோலி சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை முறியடிப்பார் என்று பேட்டி அளித்துள்ளார்.

“சில வருடங்களுக்கு முன்பு இது பற்றி என்னிடம் கேட்டிருந்தால் நிச்சயம் விராட் கோலி முறியடிப்பார் என்று சந்தேகத்திற்கு இடமின்றி கூறி இருப்பேன். ஆனால் இப்போது அதற்கு வாய்ப்பு மிகக் குறைவாக இருக்கிறது என்று கூறுவேன். ஏனெனில் இடையில் விராட் கோலி சற்று மெதுவாக விளையாடிவிட்டார். இருப்பினும் எனக்கு அவரது ஆட்டத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது. சச்சினின் சாதனையை முறியடிப்பார் என்று நம்புகிறேன். விராட் கோலிக்கு இன்னும் சில ஆண்டுகள் இந்திய அணியில் வாய்ப்பு இருக்கிறது. முப்பது சதங்கள் மீதம் இருக்கிறது. ஆண்டிற்கு குறைந்தபட்சம் ஆறு முதல் ஏழு சதங்கள் அடிக்க வேண்டும். அப்பொழுதுதான் அவரால் 3 அல்லது 4 ஆண்டுகளில் நெருங்க முடியும். ஒரு நாள் போட்டிகளில் மட்டுமல்லாது, டி20 போட்டிகளிலும் விராட் கோலி சதம் அடிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். விராட் கோலியின் ஆக்ரோஷம் மற்றும் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்ற தீரா பசி, அவருக்கு இந்த சாதனையை முறியடிக்க உதவும்.” என்று நம்பிக்கை அளிக்கும் விதமாக பேசினார்.

- Advertisement -