அஸ்வின் சவாலை ஏற்கிறேன்.. ஆனா இங்க அது மட்டும் எனக்கு சுத்தமா பிடிக்கலை – ஸ்மித் பதிலடி

0
53
Smith

ஆஸ்திரேலியாவில் அஸ்வின் கையால் தன் விக்கட்டை இழக்க தனக்கு விருப்பமில்லை என ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறியிருக்கிறார்.

பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா நட்சத்திர மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் இந்திய நட்சத்திர சூழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இருவருக்கும் இடையிலே பேட் மற்றும் பந்தில் சுவாரசியமான போட்டி இருக்கும் என கிரிக்கெட் வல்லுனர்கள் கருதுகிறார்கள். கடந்த முறை ஸ்டீவ் ஸ்மித்துக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பாக இருந்தார்.

- Advertisement -

அஸ்வினின் மறைமுக சவால்

ஸ்டீவ் ஸ்மித் தன் பந்துவீச்சை ஆரம்பத்தில் ஆஸ்திரேலியாவில் ஆதிக்கம் செலுத்தியதாகவும், அதற்குப் பிறகு புனே மற்றும் டெல்லி அணியில் வைத்து ஐபிஎல் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் உடைய பலவீனங்களை தான் சரியாக புரிந்து கொண்டிருப்பதாகவும், இதனால் அவரை தன்னால் மீண்டும் ஆட்டம் இழக்க வைக்க முடியும் எனவும் கூறியிருந்தார்.

இரு அணிகளுக்கும் இடையேயான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் துவங்குவதற்கு முன்பாக இந்திய தரப்பில் இருந்து நேரடியான சவால் பேச்சை வெளியிட்டவர் ஆக அஸ்வின் மட்டுமே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றபடி இந்திய தரப்பில் இருந்து வேறு யாரும் ஆஸ்திரேலிய அணி குறித்து பெரிய அளவில் எதுவும் பேசவில்லை.

- Advertisement -

எனக்கு இது சுத்தமாக பிடிக்கவில்லை

இதுகுறித்து ஸ்டீவ் ஸ்மித் பேசும்பொழுது “ஆஸ்திரேலியாவில் வைத்து ஆப் ஸ்பின் பந்துவீச்சில் நான் ஆட்டம் இழப்பது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஆனால் அஸ்வின் ஒரு சிறந்த பந்துவீச்சாளர் அவரும் நல்ல திட்டங்களுடன் இங்கு வந்திருக்கிறார். அவர் இந்த இரண்டு முறை என்னை வீழ்த்தவும் செய்திருக்கிறார்”

இதையும் படிங்க : விராட் கோலி இப்ப எங்க இடத்துல சாதிக்க முடியாது.. 30 ரன்னில் வெளியே அனுப்பிடுவேன் – மிட்சல் மார்ஸ் பேட்டி

“ஆனால் நான் சுறுசுறுப்பாக அவரது பந்துவீச்சில் விளையாடிய பொழுது சிட்னி மைதானத்தில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 131 மற்றும் 83 ரன்கள் எடுத்தேன். அஸ்வின் பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்தி விளையாடி அவர் செட்டில் ஆவதை தடுக்க வேண்டும். இதை செய்ய நான் விரும்புகிறேன். எங்களுக்கு இடையே சில நல்ல போட்டி இருந்திருக்கிறது. மேலும் இது ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எனவே 10 இன்னிங்ஸ் இருக்கிறது. முதலில் யார் அதிகம் செலுத்துகிறார்களோ அவர்களுக்கு சிறப்பாக செல்லும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -