ஹர்திக் கொஞ்சமாவது உங்க ப்ளேயர்ஸை பத்தி யோசிங்க.. இந்தியாவில் இதான் முதல் முறை – ஸ்மித் பேட்டி

0
507
Smith

குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சென்றது, மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிகரமான கேப்டன் ரோகித் சர்மா நீக்கப்பட்டு, அந்த இடத்திற்கு ஹர்திக் பாண்டியாவே கொண்டுவரப்பட்டது எல்லாம் சேர்ந்து, அவருக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி ரசிகர்களிடம் இருந்து மட்டுமில்லாமல், மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்களிடம் இருந்தும் பெரிய எதிர்ப்பு உண்டாகி இருக்கிறது.

இந்த எதிர்ப்புகள் மேலும் மேலும் பெருகும் வகையில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் என இரு அணிகளுக்கு எதிராக மோதிய முதல் இரண்டு போட்டியிலும் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி அடைந்திருக்கிறது. இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணியை சுற்றிலும் நிறைய எதிர்மறையான எண்ணங்கள் பரவி இருக்கிறது.

- Advertisement -

மேலும் கேப்டன் பொறுப்பிலும் ஹர்திக் பாண்டியா நல்ல விதத்தில் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் முன்னாள் இந்திய வீரர்களிடமிருந்தும் வெளிப்படையாகவே கூறப்படுகிறது. இதன் காரணமாக எப்பொழுதும் இல்லாத அளவிற்கு அழுத்தத்தை ஹர்திக் பாண்டியா தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் அனுபவித்துக் கொண்டு வருகிறார். வெற்றி மட்டுமே இதிலிருந்து அவரை மீட்க முடியும் என்பது உண்மை.

அதே சமயத்தில் ஹர்திக் பாண்டியாவுக்கு எழுந்து கொண்டிருக்கும் எதிர்ப்புகளும், ஹர்திக் பாண்டியாவின் தவறான நகர்வுகளால் ஏற்படும் தோல்விகளும், அவரை பாதிக்குமா இல்லையா என்பதை தாண்டி, அணி வீரர்களை நிச்சயம் பாதிக்கும். இது மேலும் மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியை பலவீனம் அடைய வைக்கும் என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கருதுகிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது குறித்து வெளியில் இருப்பவர்களுக்கு எதுவும் தெரியாது. இது நிச்சயம் சாதாரணமான எதிர்ப்புகள் என்பது ஹர்திக் பாண்டியாவுக்கு நன்றாக தெரியும். இந்த எதிர்ப்புகள் அவரை பாதிப்படைய வைக்காமல் கூட இருக்கலாம். ஆனால் அவருடைய அணி வீரர்களையும் இப்படியான விஷயங்கள் பாதிக்காது என்று கூற முடியாது. ஆனால் ஒவ்வொருவரும் தனிப்பட்ட உணர்வுகளுக்கு உரிமையாளர்கள்.

- Advertisement -

தனிப்பட்ட முறையில் இது ஹர்திக் பாண்டியாவை பாதிக்குமா என்றால் நிச்சயம் பாதிக்கும். ஒரு நட்சத்திர இந்திய வீரர், இந்தியாவில் வைத்தே அவருக்கு இப்படி நடக்கிறது என்பது இந்தியாவில் முதன்முறையாக நடப்பது. இதற்கு முன்பு அவருடைய வாழ்க்கையில் இப்படி ஒன்று நடைபெற்றே இருக்காது. அவர் இப்படியான ஒன்றை இந்தியாவில் எதிர்பார்த்து இருக்க மாட்டார். எனவே இது அவரையும் பாதிக்கும்

இதையும் படிங்க : நேத்து யாரையும் கேக்காம நானே பேட்டிங் பண்ண முன்ன போயிட்டேன்.. அப்புறம்தான் – அஸ்வின் சுவாரசிய பேட்டி

ஹர்திக் ஒரு சவாலான காலகட்டத்தின் மத்தியில் இருக்கிறார். அவருடைய அணி தற்பொழுது முதல் இரண்டு போட்டிகளில் தோற்று இருக்கிறது. ஐபிஎல் தொடரின் வெற்றிகரமான கேப்டனின் காலணியை நிரப்ப அவர் வந்திருக்கிறார். எனவே இதன் காரணமாக அவருக்கு தற்பொழுது அழுத்தம் இருக்கிறது. மேலும் மும்பை வான்கடேவில் சொந்த மைதானத்தில் அவருக்கு எப்படியான வரவேற்பு இருக்கும் என்பது சுவாரசியமான ஒன்று” என்று கூறி இருக்கிறார்