நினைச்சா கூட.. தோனியை மேல ஆட வைக்க முடியாது.. கடைசி 3 ஓவர் தான் – சிஎஸ்கே பிளமிங் சொன்ன காரணம்

0
9296

நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் மகேந்திர சிங் தோனி களம் இறங்கி ஒன்பது பந்துகளில் மூன்று பவுண்டரிகள், இரண்டு சிக்சர்கள் உட்பட 28 ரன்கள் குவித்தார்.

அவர் பேட்டிங் ஆர்டரில் முன்னரே களம் இறங்கி இருந்தால் சென்னை அணி கூடுதலாக ரன்களை குவித்திருக்கும் என்று அனைவரும் கூறும் நிலையில், சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங் மகேந்திர சிங் தோனி பேட்டிங் ஆர்டரில் விரைவாக களம் இறங்காதது குறித்து சற்று அதிர்ச்சிகரமான தகவலை வெளிப்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது. 18-வது ஓவர் வரை 6 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் குவித்திருந்த சென்னை அணி மகேந்திர சிங் தோனி களமிறங்கிய பிறகு 20 ஓவர்களில் 176 ரன்கள் குவித்தது. இப்போட்டியில் சென்னை அணி 15 முதல் 20 ரன்கள் குறைவாக எடுத்தது சென்னை அணியின் தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

பின்னர் களமிறங்கிய லக்னோ அணி 19 ஆவது ஓவரில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. இந்த நிலையில் மகேந்திர சிங் தோனி ஏன் பேட்டிங் ஆர்டரில் முன்னரே களமிறங்கவில்லை என்பது குறித்து சென்னை அணியின் தலைமை பயிற்ச்சியாளரான ஸ்டீபன் பிளமிங் அதற்கான காரணத்தை தெளிவுபடுத்தி இருக்கிறார்.

கடைசி 2-3 ஓவர் பேட்டிங் செய்யும் தோனி

இது குறித்து அவர் கூறும் பொழுது “மகேந்திர சிங் தோனியின் பேட்டிங் அணிக்கு ஆச்சரியப்படுத்தும் வகையில் இல்லை. ஏனெனில் அவர் போட்டிக்கு முன்பே பயிற்சியில் சிறப்பாக விளையாடினார். எனவே இது உத்வேகம் அளிக்கும் வகையில் உள்ளது. இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பு அவரது பேட்டிங் திறமை அபாரமாக இருந்தது. அவரது முழங்காலில் ஏற்பட்ட காயத்திலிருந்து தற்போது மீண்டு வருவதால் குறிப்பிட்ட அளவு பந்துகள் மட்டுமே அவரால் எதிர்கொள்ள முடிகிறது. இதனால்தான் தோனி நீண்ட நேரம் களத்தில் நின்று விளையாடாததற்கு காரணம்.

- Advertisement -

மகேந்திர சிங் தோனி நீண்ட நேரம் விளையாட வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். இந்த ஐபிஎல் தொடரில் அவர் எங்களுக்கு தேவை, மேலும் அவர் 2-3 ஓவர் விளையாடும் கேமியோ அவரது முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. சிஎஸ்கே அணியின் பேட்டிங் யூனிட் நன்றாக விளையாடி ஒரு பொசிஷனுக்கு எடுத்து சென்று விடுகிறாராகள். அதற்கு பின் தோனி விளையாடி ரன்களை மேலே எடுத்து சென்று விடுகிறார். இது பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது.

இதையும் படிங்க: தோனி சொல்ல நினைக்கும் இது கடவுளுக்கு தெரியும்.. ஜடேஜாகிட்ட எதிர்பாக்காதிங்க – இந்திய முன்னாள் வீரர் பேச்சு

அவர் வெளியே வந்து விளையாடிப் பொழுது போக்கும் சூழல் அற்புதமாக இருக்கிறது. அவர் சாதித்தது பற்றி நாங்கள் நம்ப முடியாத அளவிற்கு பெருமை கொள்கிறோம். ரசிகர்கள் அவருக்கு கொடுக்கும் அன்பின் அளவை கண்டு நாங்கள் ஆச்சரியப்படுகிறோம். அவர் எங்கள் பக்கத்தில் இருப்பது எங்களுக்கு மிகவும் பெருமை. நாங்கள் அதை முழுமையாக அனுபவிக்கிறோம் மகேந்திர சிங் தோனியும் ஒவ்வொரு நிமிடமும் அதை அனுபவித்து விளையாடிக் கொண்டிருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.