தோனி சொல்ல நினைக்கும் இது கடவுளுக்கு தெரியும்.. ஜடேஜாகிட்ட எதிர்பாக்காதிங்க – இந்திய முன்னாள் வீரர் பேச்சு

0
253
Jadeja

நடப்பு 17ஆவது ஐபிஎல் சீசனில் நேற்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைத்தது. வழக்கம் போல் இந்தப் போட்டியிலும் தோனி 8 பந்துகளை மட்டுமே சந்தித்து 28 ரன்கள் குறித்து அசத்தினார். ஜடேஜாவால் அரை சதம் அடிக்க முடிந்த பொழுதும் அதிரடி காட்ட முடியவில்லை. மேலும் ரச்சின் ரவீந்தரா ரன் அடிக்கவில்லை. இது குறித்து ஆகாஷ் சோப்ரா தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா கூறும்பொழுது ” ஜடேஜாவை மேலே அனுப்ப வேண்டியதாக இருந்தது. அவர் நல்ல முறையில் விளையாடிய அரைசதம் அடித்தார். ஆனால் ரசிகர்கள் கடைசி கட்டத்தில் எதிர்பார்க்கும் அதிரடியை அவரால் விளையாட முடிவதில்லை. கிட்டத்தட்ட அவர் பவர் பிளேவில் பேட்டிங் செய்ய வந்தார். அங்கிருந்து 40 பந்துகள் விளையாடும் பொழுது, 70 இல்லை 80 ரன்கள் வெளியில் எதிர்பார்க்கிறார்கள். அதை அவரால் செய்ய முடிவதில்லை.

- Advertisement -

அடுத்து தோனி வந்தார் அவர் என்ன மாதிரியான மனிதர். அவர் வந்த உடனேயே வைடு யார்க்கர் வீச ஆரம்பித்து விடுகிறார்கள். அவர் அதையும் ஓவர் கவர் திசையில் தூக்கி சிக்ஸர் அடிக்கிறார். அங்கிருந்து பந்துவீச்சாளர்களுக்கு உடனே பெரிய அழுத்தம் உருவாகிவிடுகிறது.

நேற்று அவர் கவர்மேல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்து சில பவுண்டரிகளும் அடித்தார். யாஸ் தாக்கூர் வந்து வீச்சில் பெரிய சிக்சர் ஒன்றை மீண்டும் அடித்தார். இது மட்டும் இல்லாமல் மோசின் கான் பந்துவீச்சில் 360 டிகிரியில் ஒரு சிக்ஸர் அடித்தார். தற்போது மாறுபட்ட ஒரு தோனி வந்து இருக்கிறார். சிங்கத்திற்கு வயதாகி விட்டாலும் அது வேட்டையாடுவதில் இப்பொழுதும் நம்பர் ஒன் தான் என தோனி ரசிகர்களுக்கு சொல்வதை கடவுள் அறிவார்.

அதே சமயத்தில் சிஎஸ்கே அணிக்கு துவக்கம் சரியாக இல்லை. இது அந்த அணியின் பிரச்சனை என்று நான் சொல்வேன். அடுத்து சிஎஸ்கே அணி சொந்த மைதானத்தில் தனது மூன்று போட்டிகளையும் விளையாடுகிறது. மூன்றையும் வென்று ப்ளே ஆப்ஸ் வரலாம் கோப்பையையும் கைப்பற்றலாம். ஆனால் அவர்களுடைய பேட்டிங் சரியில்லை என்பதுதான் உண்மை.

- Advertisement -

இதையும் படிங்க : எப்படி அவர் அதை பண்றாரு?.. தோனி இந்த விஷயத்துல பெரிய புதிர்.. என்னால நம்பவே முடியல – டாம் மூடி பேச்சு

ரச்சின் நன்றாக விளையாடாத பொழுது நமக்கு உடனே அங்கு ஓபனிங் சரியாக இல்லை என்று தோன்ற ஆரம்பிக்கிறது. துவக்க இடத்தில் ரன்கள் வரவில்லை என்றால் நீண்ட காலம் சரியாக செயல்படுவது முடியாத விஷயம். இதனால்தான் சிஎஸ்கே சிக்கிக் கொள்கிறது. ரகானே தன்னால் முடிந்த வரை அங்கு இருந்து கொஞ்சம் ரன்கள் எடுத்தார்” என்று கூறியிருக்கிறார்.