கடந்த ஐபிஎல் தொடரின் மினி ஏலத்தில் இங்கிலாந்தின் இளம் இடது கை வேகபந்து வீச்சு ஆல் ரவுண்டர் சாம் கரன் பஞ்சாப் கிங்ஸ் அணியால் 18.50 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டிருந்தார். இதுதான் ஐபிஎல் ஏல வரலாற்றில் ஒரு வீரர் அதிக தொகைக்கு ஏலம் போன விலையாக அப்பொழுது அமைந்திருந்தது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் போட்டியிட்டு, ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ்சை 20.50கோடி ரூபாய்க்கு வாங்கியது. இவரே ஐபிஎல் ஏல வரலாற்றில் முதன் முதலில் 20 கோடிகளை தொட்ட வீரராக பதிவானார்.
இதே ஐபிஎல் மினி ஏலத்தில் ஆஸ்திரேலியாவின் இடதுகை வேகப் பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 24.75 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார். தற்பொழுது இவரே ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரராக இருந்து வருகிறார்.
ஹர்ஷித் ரா ணா – மிட்சல் ஸ்டார்க்
இந்த நிலையில் இன்று பாட் கம்மின்ஸ் அணியான ஹைதராபாத் அணியும், மிட்சல் ஸ்டார்க் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதிய போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. கடைசி ஓவர் திரில்லர் போட்டியாக நடைபெற்ற இதில் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் கடைசி ஓவருக்கு 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இந்தியாவின் இளம் வேகப்பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா எட்டு ரன்கள் மட்டுமே விட்டுத் தந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வெற்றி பெற வைத்தார். இவருடைய ஐபிஎல் சம்பளம் 20 லட்சம் ரூபாய் மட்டுமே. 24.75 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் ஸ்டார்க் 4 ஓவர்கள் பந்துவீசி விக்கெட் கைப்பற்றாமல் 53 ரன்கள் கொடுத்தார். ஆனால் ஹர்ஷித் ராணா நான்கு ஓவர்களுக்கும் 33 ரன்கள் மட்டும் கொடுத்து மூன்று விக்கெட் கைப்பற்றினார்.
மிட்சல் ஸ்டார்க் ஒரு போட்டிக்கு ஒரு கோடியே 76 லட்சம், ஒரு ஓவருக்கு 44 லட்சம், ஒரு பந்துக்கு 7 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார். ஸ்டார்க் ஒரு போட்டியில் மூன்று பந்து வீசுவதற்காக வாங்கும் சம்பளம்தான் ஹர்ஷித் ராணாவின் ஒட்டுமொத்த ஐபிஎல் சம்பளம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஐபிஎல் 2024: பிளே ஆஃப் மற்றும் பைனல் நடக்கும் மைதானங்கள் அறிவிப்பு.. சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சி
இதேபோல் பேட் கம்மின்ஸ் ஒரு போட்டிக்கு ஒரு கோடியே 46 லட்சம், ஒரு ஓவருக்கு 36 லட்சத்து 60 ஆயிரம், ஒரு பந்துக்கு 6 லட்சத்து பத்தாயிரம் சம்பளம் வாங்குகிறார். மேலும் சாம் கரன் ஒரு போட்டிக்கு ஒரு கோடியே 32 லட்சம், ஒரு ஓவருக்கு 33 லட்சம்,ஒரு பந்துக்கு 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார். அதாவது இவர்கள் மூவரும் 14 போட்டிகள் விளையாடி, 56 ஓவர்களுக்கு 336 பந்துகள் வீசினால் இந்த வீதத்தில் சம்பளம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.