ஸ்டார்க் ரபாடா ஓகே.. பும்ரா வேண்டாம்.. தவான் கனவு ODI அணியின் முதல் ஐந்து வீரர்கள்.. யார் யாருக்கு இடம்!

0
565
Shikar

இந்தியாவில் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் கடந்த ஆண்டு வரை துவக்க வீரருக்கான இடத்தில் இடது கை அனுபவ வீரர் ஷிகர் தவான் முன்னணியில் இருந்தார். ஆனால் ஒரு ஆறு ஏழு மாத இடைவெளியில், மிகப்பெரிய தொடரில் அவர் இல்லாமல் போகும் அளவிற்கு சூழ்நிலைகள் மாறிவிட்டது.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை நடைபெற்ற காரணத்தினால், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டி20 போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தினார். இதனால் ஒருநாள் கிரிக்கெட் இந்திய அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக பொறுப்பேற்று இருந்தார்.

- Advertisement -

இவர் கேப்டனாக இருந்த சமயத்தில்தான் சுப்மன் கில் ஒருநாள் கிரிக்கெட் இந்திய அணிக்கு கொண்டுவரப்பட்டார். ஆனால் யாருக்கு கேப்டனாக ஷிகர் தவான் இருந்தாரோ அவராலே தன்னுடைய இடத்தை ஒருநாள் கிரிக்கெட் இந்திய அணியில் இழந்தார்.

நிச்சயமாக இந்தியாவில் நடக்கும் உலகக்கோப்பையில் விளையாடுவதற்கு மிகவும் தகுதியோடு இப்பொழுதும் வரை ஷிகர் தவன் இருந்து கொண்டு தான் இருக்கிறார். அவர் விளையாட்டுப் பயிற்சியையோ அல்லது உடற்பயிற்சியையும் இதுவரை நிறுத்தவும் இல்லை. அதே சமயத்தில் தான் நீக்கப்பட்டது குறித்து அவர் எந்த குறையும் வெளியில் சொல்லவில்லை.

இந்த நிலையில் தனது ஒருநாள் கிரிக்கெட் கனவு அணிக்கு முதல் ஐந்து வீரர்களை அவர் தேர்வு செய்திருக்கிறார். அதில் முதல் வீரராக தனது மிக நெருங்கிய நண்பரான விராட் கோலியை தேர்வு செய்திருக்கிறார். கிரிக்கெட் உலகில் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்று அவரை கூறி தேர்ந்தெடுத்திருக்கிறார்.

- Advertisement -

இரண்டாவது வீரராக தன்னுடன் துவக்க இடத்தில் விளையாடிய தற்போதைய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை அவர் தேர்ந்தெடுத்து இருக்கிறார். பெரிய தொடர்களில் தன்னை யார் என்று நிரூபிக்கும் திறமை படைத்தவர் என்று ரோஹித் சர்மாவை கூறியிருக்கிறார்.

அடுத்து மூன்று பந்துவீச்சாளர்களை தேர்ந்தெடுத்து இருக்கும் அவர் முதலில் ஆஸ்திரேலியாவின் இடது கை வேகபந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க்கை தேர்ந்தெடுத்திருக்கிறார். உலகின் அதிவேக பந்துவீச்சாளர் என்று அவரை குறிப்பிட்டு இருக்கிறார்.

இவருடைய இந்த கனவு அணிக்கு சுழற் பந்துவீச்சாளராக ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த வலது கை சுழற் பந்துவீச்சாளர் ரஷீத் கானை தேர்வு செய்திருக்கிறார். பிக் செய்வதற்கு மிகவும் கடினமான மர்ம பந்துவீச்சாளர் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தன்னுடைய கனவு அணிக்கு மற்றும் ஒரு வேகப்பந்துவீச்சாளராக 28 வயதான தென் ஆப்பிரிக்காவின் வலது கை வேத பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா தேர்ந்தெடுத்து இருக்கிறார். அதிகப்படியான வேகம் மற்றும் பவுன்ஸ்காக இவரை தேர்ந்தெடுத்ததாக கூறியிருக்கிறார்.

ஷிகர் தவான் தன்னுடைய அணியில் தற்காலக் கட்டத்தில் மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளராக விளங்கும் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ட் பிரித் ப
பும்ராவை தேர்ந்தெடுக்காதது மிகவும் ஆச்சரியமான ஒன்றாகவே இருக்கிறது.