ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான முதல் போட்டியிலேயே டக் அவுட் ஆன 5 இந்திய கிரிக்கெட் வீரர்கள்

0
3323
MS Dhoni First Match

ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களுக்கும் ஒரு மிகப்பெரிய கனவு இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதுதான்.1983ஆம் வருடம் கபில்தேவ் தலைமையில் இந்திய அணி உலக கோப்பையை முதல் முறையாக கைப்பற்றியது. அதற்கு முன் இரண்டு முறை வெஸ்ட் இண்டீஸ் உலகக்கோப்பையை கைப்பற்றி உலக அணிகளுக்கு பெரும் சவாலாக இருந்த நிலையில், அப்போதுள்ள இந்திய அணி வெற்றி பெற்றது பல இந்திய இளம் வீரர்களிடம் இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற ஆசையை தூண்டியது என்று தான் கூற வேண்டும்.

சச்சின் டெண்டுல்கர் கூட 1983ஆம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றிய நேரத்தில் தானும் இந்திய அணிக்காக நன்றாக விளையாடி உலக கோப்பையை கைப்பற்ற கனவு கண்டேன் என்று கூறியிருக்கிறார். அவ்வளவு எளிதில் ஒருநாள் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைத்து விடாது. அதற்காக பெரிய அளவில் முயற்சி செய்யவேண்டும். அப்படி வாய்ப்பு கிடைத்து களமிறங்கும் முதல் போட்டியிலேயே டக் அவுட் ஆன சீனியர் கிரிக்கெட் வீரர்களை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

5. சுரேஷ் ரெய்னா

2005ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக தனது முதல் ஒருநாள் போட்டியில் இவர் விளையாடத் தொடங்கினார். அந்த போட்டியில் அவருக்கு முதல் பந்தை ஜாம்பவான் வீரர் முத்தையா முரளிதரன் வீசினார். எதிர்பாராத விதமாக தனது முதல் பந்திலேயே தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதன் மூலம் முதல் போட்டியிலேயே ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். அந்த போட்டியின் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியசத்தில் தோல்வி அடைந்தது.

4. ஷிகர் தவான்

Shikhar Dhawan

2010 ஆம் ஆண்டு தனது முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாட களமிறங்கினார். விசாகப்பட்டினத்தில் நடந்த இந்த போட்டியில் இவருக்கும் முதல் பந்தை கிளின்ட் மெக்காய் வீசினார். முதல் பந்தில் ரன் எதுவும் அடிக்காத தவான் 2-வது பந்தை மேற்கொண்டார்.

ஆனால் தனது இரண்டாவது பந்தில் தனது விக்கெட்டை கிளின்ட் மெக்காய் இடம் பறிகொடுத்தார். இருப்பினும் அந்த போட்டி முடிவில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

3. சச்சின் டெண்டுல்கர்

இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்களையும் மேலும் ரன்களைக் குவித்து வரும் இவர் தான். இருப்பினும் 1989ஆம் ஆண்டு இவர் களமிறங்கிய முதல் போட்டியில் டக் அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக இவர் தனது முதல் ஒருநாள் போட்டியில் விளையாட களமிறங்கினார்.

வக்கார் யூனிஸ் வீசிய முதல் பந்தில் பந்தை சரியாக அடிக்காமல் போன சச்சின் இரண்டாவது பந்தில் டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். அந்தப் போட்டியின் முடிவில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

2. வாசிம் ஜாபர்

Wasim Jaffer

ஃபர்ஸ்ட் கிளாஸ் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய ஜாஃபரால் ஒரு நாள் போட்டிகளில் அவ்வளவு சிறப்பாக விளையாட முடியவில்லை. அதன் காரணமாகவே இவருக்கு வாய்ப்பும் கம்மியகவே கிடைக்க பட்டது.

2006ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் விளையாடத் தொடங்கினார். ஆனால் அறிமுகமான முதல் போட்டியில் ஷான் பொலொக் வீசிய அற்புதமான பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அந்த போட்டியில் இந்திய அணி இறுதியில் 157 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி பெற்றது குறிப்பிடதக்கது.

1. மகேந்திர சிங் தோனி

2004 ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிராக தனது முதல் ஒருநாள் போட்டியில் மகேந்திரசிங் தோனி விளையாட வந்தார். தனது முதல் போட்டி அவருக்கு எதிர்பார்த்த போட்டியாக அமையவில்லை. அந்த போட்டியில் சற்றுக் கீழே இறங்கி விளையாட மகேந்திர சிங் தோனி வந்தார்.

எதிர்பாராத விதமாக ரன் அவுட்டாகி அந்த போட்டியில் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். இருப்பினும் அந்த போட்டியின் முடிவில் இந்திய அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.