முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பௌலிங் செய்ய முடிவு செய்தது. இலங்கையின் இந்த முடிவு இந்திய அணிக்கு பெரிய ஆபத்தாக அமைந்துள்ளது.
-இந்தியா இலங்கை விளையாடி வரும் முதல் ஒருநாள் போட்டி கவுகாத்தி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த மைதானத்தில் டாஸ் வெல்லும் அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்யும்.
ஏனெனில் போட்டியின் முதல் பாதியிலேயே பனிப்பொழிவு அதீதமாக இருக்கும். இரண்டாவது பாதியில் கிட்டத்தட்ட மழை பெய்தது போல பனிப்பொழிவு காரணமாக ஈரப்பதம் உச்சத்தில் இருக்கும். இதனால் ஃபீல்டிங் செய்வது அவ்வளவு எளிதல்ல. அத்துடன் பந்தை அழுத்தமாக பிடித்து பந்துவீசுவதும் அவ்வளவு எளிதாக இருக்காது.
இந்நிலையில் முதல் ஒருநாள் போட்டி துவங்குவதற்கு முன்பு போடப்பட்ட டாசை வென்ற இலங்கை அணி லாவகமாக பௌலிங் செய்ய முடிவு செய்துவிட்டது. இது குறித்து அந்த அணியின் கேப்டன் தசுன் ஷனக்கா பேசுகையில், “அனைவருக்கும் தெரியும் இந்த மைதானத்தில் முதலில் பவுலிங் செய்வது சரியான முடிவாக இருக்கும் என்று. ஏனெனில் இரண்டாம் பாதியில் பனிப்பொழிவு வழக்கத்திற்கு மாறாக மிக அதிகமாகவே இருக்கும். வேறு எந்த காரணமும் இல்லை.” என்றார்.
இது குறித்து கேப்டன் ரோகித் சர்மா பேசுகையில், “டாஸ் கட்டாயம் வெல்ல வேண்டும் என்று தான் வந்தேன் நானும் முதலில் பௌலிங் செய்ய தான் விரும்புகிறேன். துரதிஷ்டவசமாக அது நடக்கவில்லை மைதானம் பேட்டிங் செய்ய ஏதுவாக இருக்கும் என்பதால் முடிந்தவரை மிகப் பெரிய ஸ்கோரை முன்னிறுத்தி டார்கெட் வைப்போம்.
இனி வரும் ஒரு நாள் தொடர்கள் அனைத்தும் உலகக்கோப்பையை நோக்கமாகக் கொண்டு விளையாடுவதால் எந்த ஒரு கடினமான சூழலையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். கடைசியாக இந்த மைதானத்தில் விளையாடிய போது நன்றாக பேட்டிங் செய்ய முடிந்தது அதை இம்முறையும் தொடருவோம்.” என்றார்.
இந்திய அணியின் பிளேயிங் லெவனை பொறுத்த வரை, இசான் கிஷன், சூரியகுமார் யாதவ், அர்ஷதிப் சிங் ஆகியோர் இடம் பெறவில்லை.
இந்தியாவின் பிளேயிங் லெவன்:
ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஷ் ஐயர், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல், முகமது சமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், யுஷ்வேந்திர சகல்.