ஆசிய கோப்பை – தவறான முடிவு எடுத்த இலங்கை.. நல்ல வாய்ப்பு வீணானது

0
32
Srilanka

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று சம்பிரதாய ஆட்டமாக இலங்கையும் பாகிஸ்தானும் பலப்பரிட்சை நடத்துகின்றன. இவ்விரு அணிகளும் ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில், பெயருக்கு இன்றைய ஆட்டம் நடைபெறுகிறது. இந்த நிலையில் இரண்டு அணிகளுமே தங்களது பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்களை செய்து இருக்கிறார்கள்.

- Advertisement -

துபாயில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீசும் அணியே வெற்றி பெறுகிறது. ஆனால் இந்த போட்டியின் முடிவு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதால் டாஸ் வெல்லும் அணி பேட்டிங் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.இந்த தொடரில் தனது சில போட்டிகளாக தொடர்ந்து டாஸ் வென்ற இலங்கை கேப்டன் ஷனாக இன்றைய ஆட்டத்திலும் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். இது தவறான முடிவாக பார்க்கப்படுகிறது.

அதற்கு காரணம் டாஸை எப்போதும் நாம் வெல்ல முடியாது. ஒருவேளை இறுதிப் போட்டியில் டாசை இலங்கை கேப்டன் ஷனக்கா இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்யும் நிலைமை வந்தால் அப்போது ஆடுகளத்தில் எப்படி விளையாடுவது என்று தெரியாமல் திணற வாய்ப்புள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்தில் அவர்கள் பேட்டிங் செய்ய முடிவு எடுத்திருந்தால் அது ஒரு நல்ல பயிற்சியாக இலங்கை வீரர்களுக்கு இருந்திருக்கும். ஆனால் அதனை ஷனகா மிஸ் செய்து விட்டார். இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணையில் அசலங்கா மற்றும் பெர்னாண்டோ அதிரடியாக நீக்கப்பட்டு தனஜெயர் டீ சில்வா மற்றும் பிரமோத் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது .

இதேபோன்று கேப்டன் பாபர் அசாமும் டாஸ் வென்றால் பந்துவீச்சை தான் தேர்வு செய்திருப்பேன் என்று கூறியிருந்தார். தற்போது இயற்கையே அவருக்கு பேட்டிங் செய்ய ஒரு நல்ல வாய்ப்பு கொடுத்திருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான அணியில் நஷிம் சா மற்றும் சதாப்கான் ஆகிய இருவருக்கும் ஓய்வு வழங்கப்பட்டு இருக்கிறது. அவர்களுக்கு பதிலாக காதிர் மற்றும் ஹசன் அலி அணிக்கு திரும்பியுள்ளனர். ஆசிய கோப்பை தொடரில் பாபர் அசாம் சொதப்பி வருகிறார். இதனால் ஃபைனலுக்கு முன்பு இன்றைய ஆட்டத்தில் அவர் ரன் குவித்து ஃபார்முக்கு திரும்புவார் என பாகிஸ்தான் ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

- Advertisement -