ஆப்கானிஸ்தான் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் போட்டிகளை கொண்ட தொடரில் ஆடி வருகிறது . இரண்டு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஆரம்பிக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான் அணி .
இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று காலை 10 மணி அளவில் தொடங்கியது . இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது . அந்த அணியின் துவக்க வீரர்கள் நிசாங்கா மற்றும் கருநரத்தினே இருவரும் சிறப்பான துவக்கத்தை அமைத்துக் கொடுத்தனர் .
நிசானகா 43 ரண்களில் ஆட்டம் இழந்தாலும் மிகச் சிறப்பாக ஆடிய கருணரத்னே 53 ரன்களை எடுத்தார். இவர் இரண்டு வருடங்களுக்குப் பிறகு ஒரு நாள் போட்டியில் அடிக்கும் அரை சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது . இவரைத் தொடர்ந்து சிறப்பாக ஆடிய குஷால் மெண்டிஸ் 75 பந்துகளில் 78 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார் . இதில் ஏழு பௌடர்களும் ஒரு சிக்ஸரும் அடங்கும் . இவருக்கு உறுதுணையாக ஆடிய சமர விக்ரமா 45 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார் .
இலங்கை அணியின் ஆல்ரவுண்டர்களான வணிந்து ஹசரங்கா 12 பந்துகளில் 29 ரன்களும் கேப்டன் சனக்கா 13 பந்துகளில் 23 ரண்களும் தனஞ்செயா டிசில்வா 24 பந்துகளில் 29 ரண்களும் எடுக்க இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 323 ரண்களுக்கு ஆரம்பிக்கட்டுகளை இழந்தது. ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில் பரித் அகமது மற்றும் முகமது நபி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
324 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது சென்ற போட்டியில் சிறப்பாக ஆடிய இப்ராஹீம் ஷத்ரான் இந்தப் போட்டியிலும் மிகச் சிறப்பாக விளையாடி அரை சதம் எடுத்தார் . அவர் 75 பந்துகளில் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் இரண்டு பவுண்டரிகளுடன் 54 ரன்கள் ஆட்டம் இழந்தார் . மேலும் அந்த அணியின் கேப்டன் சஹிதி 57 ரன்களும் ரஹமத் ஷா 36 ரன்களும் எடுத்தனர் . மற்ற எந்த பேட்ஸ்மன்களும் நிலைத்து நின்று ஆடாததால் ஆப்கானிஸ்தான் அணி 42.1 ஓவர்களில் 191 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது .
இதன் மூலம் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி தொடரை சமன் செய்தது . இலங்கை அணியின் பந்துவீச்சில் தனஞ்செயா டிசில்வா முப்பத்தி ஒன்பது ரண்களை கொடுத்து மூன்று விக்கெட்டுகளையும் வனிந்து ஹசரங்கா 42 ரன்களை கொடுத்து மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினர் . வேகப்பந்துவீச்சாளர் துஷ்மந் சமீரா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இலங்கை அணியின் கேப்டன் சனக்கா மற்றும் இளம் வீரர் பத்திரனா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி தொடரை சமன் செய்துள்ளது. தனஞ்செயா டிசில்வா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.