பங்களாதேஷ் அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் முன்னேறியது இலங்கை – இந்தியாவின் நிலை இதுதான்

0
142
Srilanka WTC

2021-2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்களாதேஷிற்குச் சுற்றுப்பயணம் செய்து இலங்கை அணி விளையாடியது. இந்த தொடரில் முதல் போட்டி மே 15 முதல் மே 19வரை ஷாகூர் அகமத் செளத்ரி சிட்டாங்காம் மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் திமுத் கருணரத்னே பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆஞ்சலோ மேத்யூசின் 199 ரன் என்ற பெரிய சதத்தால் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 397 ரன்கள் குவித்தது. அடுத்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய பங்களாதேஷ் அணி தனது முதல் இன்னிங்ஸில் தமிம் இக்பாலின் 133, முஷ்பிகுர் ரகுமானின் 105 என இரண்டு சதங்களால் 465 ரன்களை குவித்தது. அடுத்து இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் எடுத்திருக்க ஆட்டம் டிராவில் முடிந்தது. 199 ரன்கள் விளாசிய ஆஞ்சலோ மேத்யூஸ் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

- Advertisement -

அடுத்து தொடரின் கடைசி மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டி மே 23 தொடங்கி மே 27 இன்று முடிந்தது. மொமினுல் ஹக் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். லிட்டன் தாஸ் 141, முஷ்பிகுர் ரகுமான் 175* ஆகியோரின் சதத்தால் பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்ஸில் 365 ரன்கள் குவித்தது. இலங்கைத் தரப்பில் கசன் ரஜிதா 5 விக்கெட், அஷீதா பெர்ணாடோ 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள்.

இதையடுத்து இலங்கை தன் முதல் இன்னிங்ஸில் ஆஞ்சலோ மேத்யூஸ் 145*, தினேஷ் சண்டிமால் 124 ஆகியோரின் சதத்தால் 506 ரன்களை குவித்தது. அடுத்து தன் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய பங்கதாதேஷ் அணியை 169 ரன்களில் இலங்கை பந்துவீச்சாளர்கள் சுருட்டினர். இலங்கை அணி தரப்பில் அஷிதா பெர்ணாடோ ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்து 29 என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி பத்து விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த ஆட்டத்தில் பத்து விக்கெட்டுகளை வீழ்த்திய அஷிதா பெர்ணாடோ ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த டெஸ்ட் தொடரை 1-0 என்று இலங்கை அணி வென்றுள்ளதால், 2021-2023 ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அணிகளின் வரிசையில் இந்தியாவிற்கு அடுத்து நான்காவது இடத்திற்கு இலங்கை அணி முன்னேறி உள்ளது. பங்களாதேஷ் அணி எட்டாவது இடத்தில் உள்ளது.

- Advertisement -
2021-2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அணிகளின் தரவரிசை பட்டியல்

ஆஸ்திரேலியா
செளத்ஆப்பிரிக்கா
இந்தியா
இலங்கை
பாகிஸ்தான்
நியூசாலாந்து
வெஸ்ட் இன்டீஸ்
பங்களாதேஷ்
இங்கிலாந்து