இலங்கை வந்துள்ள ஆப்கானிஸ்தான அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் இலங்கை அணிக்கு எதிராக மோதியது. இந்த போட்டியில் பத்து விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இதற்கு அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் 2 அணிகளுக்கும் இடையே நடைபெறுகிறது.
இந்த தொடரின் முதல் போட்டி இன்று பல்லேகலே மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அந்த அணியின் நட்சத்திர வீரர் ரசித் கான் இடம் பெறவில்லை.
இலங்கை அணிக்கு துவக்கம் தருவதற்கு பதும் நிசாங்கா மற்றும் அவிஷ்கா பெர்னாடோ இருவரும் வந்தார்கள். இந்த ஜோடி மிகச் சிறப்பாக விளையாடி இருவருமே ஆறு சதத்தை கடந்தார்கள்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி 182 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பிரிந்தது. அவிஷ்கா பெர்னாடோ 88 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 88 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இதற்கு அடுத்து மூன்றாவது வீரராக வந்த குசால் மெண்டிஸ் 16 ரன்கள் எடுத்து வெளியேறினார். நான்காவது இடத்தில் வந்த சதிர சமரவிக்கிரமா 44 ரன்கள் எடுத்தார்.
ஒரு முனையில் நிலைத்து நின்று விளையாடிய துவக்க ஆட்டக்காரர் பதும் நிசாங்கா இந்த முறை அரை சதத்தை சதமாக மாற்றினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர் 150 ரன்களையும் கடந்தார்.
இந்த நிலையில் அவருக்கு இலங்கை கிரிக்கெட்டில் அற்புதமான ஒரு சாதனை காத்திருந்தது. இலங்கை கிரிக்கெட்டில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் முதல் இரட்டை சதம் அடித்த வீரர் என்கின்ற சாதனையை நோக்கி அவர் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறினார்.
இறுதியில் பதும் நிசாங்கா ஆட்டம் இழக்காமல் 137 பந்துகளில் 19 பவுண்டரிகள் மற்றும் ஏழு சிக்ஸர்கள் உடன் 200 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்று சாதனை படைத்தார்.
இலங்கை அணி 50 ஓவர் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு 371 ரன்கள் குவித்து இருக்கிறது. சமீப காலத்தில் மிகவும் தடுமாறி வந்த இலங்கை கிரிக்கெட்டுக்கு இவரது இந்த இரட்டை சதம் நம்பிக்கை அளிப்பதாக இருக்கும். மேலும் இலங்கைகிரிக்கெட் ரசிகர்களுக்கும் இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாக அமைந்திருக்கிறது.