35 ஓவர்கள்.. 2 வீரர்கள் இல்லாமல் விளையாடி ஆப்கான் வொயிட் வாஷ்.. இலங்கை பதும் நிசாங்கா அதிரடி

0
420
Afghanistan

இந்தியாவில் நடந்து முடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகச் சிறப்பான போட்டியை எல்லா அணிகளுக்கும் கொடுத்தது.

ஏற்கனவே உலகக் கோப்பைகளை வென்று இருக்கின்ற இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை என மூன்று அணிகளையும்ஆப்கானிஸ்தான அணி வீழ்த்தி அசத்தி இருந்தது.

- Advertisement -

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் முடிவுக்கு பின்னால், தற்பொழுது இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்து தொடரையும் இழந்துவிட்டது.

இந்த நிலையில் மூன்றாவது மற்றும் தொடரின் கடைசி போட்டி இன்று நடைபெற்றது. போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் குர்பாஸ் 48(57), ரஹமத் ஷா 65 (77), அசமத்துல்லா ஓமர்சாய் 54(59), இக்ரம் அலிகில் 32(38) ரன்கள் எடுக்க, பத்து விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை அணியின் தரப்பில் பிரமோத் மதுசன் மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணிக்கு, இந்த தொடரின் முதல் போட்டியில் அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்த துவக்க ஆட்டக்காரர் பதும் நிசாங்கா இந்த முறையும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இலங்கை அணிக்கு பதும் நிசாங்கா 118(101), மற்றும் ஒரு துவக்க ஆட்டக்காரர் அவிஷ்கா பெர்னடோ 91(66) என ரன்கள் குவித்து மிகச் சிறப்பான துவக்கம் கொடுத்தார்கள். இதற்கு அடுத்து குசால் மெண்டிஸ் 40(29) ரன்கள் எடுக்க, மூன்று விக்கெட் இழப்புக்கு 35.2 ஓவர்களில், இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதையும் படிங்க : “பும்ராவுக்கு இந்த முறை இருக்கு.. இந்த ஸ்பெஷல் பிளான கொண்டு வர போறோம்” – பென் ஸ்டோக்ஸ் பேச்சு

இந்த வெற்றியின் மூலம் தொடரை மூன்றுக்கு பூஜ்ஜியம் என ஒயிட் வாஷ் செய்து வென்று இருக்கிறது. ஆப்கானிஸ்தான் பவுலிங் யூனிட்டில் முஜீப் மற்றும் ரஷித் கான் இருவரும் இல்லாதது மிகப்பெரிய பின்னடைவை கொடுத்திருக்கிறது.