“பும்ராவுக்கு இந்த முறை இருக்கு.. இந்த ஸ்பெஷல் பிளான கொண்டு வர போறோம்” – பென் ஸ்டோக்ஸ் பேச்சு

0
183
Stokes

இங்கிலாந்து டெஸ்ட் அணி 2022 ஆம் ஆண்டு முதல் மெக்கலம் பயிற்சியில், பென் ஸ்டோக்ஸ் தலைமையில், டெஸ்ட் கிரிக்கெட்டை மிகவும் அதிரடியான முறையில் மூன்று துறைகளிலும் அணுகி வருகிறது.

குறிப்பாக இங்கிலாந்து அணிக்கு எதிராக பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது என்பது எந்த அணிக்கும் தற்போது மிகப்பெரிய கடினமான விஷயமாக இருக்கிறது.

- Advertisement -

இங்கிலாந்து அணியின் அச்சமற்ற பேட்டிங் முறையின் காரணமாக, டெஸ்ட் கிரிக்கெட்டையே அவர்கள் மிக நீண்ட வடிவ ஒரு நாள் கிரிக்கெட் போட்டியாக மாற்றி விடுகிறார்கள்.

இதன் காரணமாக பேட்டிங் செய்ய சதகமான ஆடுகளத்தில் பீல்டர்களை நெருக்கி வைத்து கேப்டன்களால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்க முடிவதில்லை. அவர்கள் ஆரம்பத்தில் பௌண்டரிகளை எளிதாக அடிப்பது போலவே, பின்பு ஒன்று இரண்டு ரன்கள் என எளிதாக அடிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். இதனால் அவர்களின் ரன் வேகத்தை தடுக்கவே முடிவதில்லை.

தொடர்ச்சியாக உள்நாட்டில் பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தை டெஸ்ட் கிரிக்கெட்டில் கொண்டு வந்து, இங்கிலாந்து அணி உலகத்தின் எல்லா பெரிய கிரிக்கெட் நாடுகளுக்கும் சவால் விட்டு இருக்கிறது. கடைசி இன்னிங்ஸில் 400 ரன்கள் துரத்த வேண்டும் என்றாலும் அவர்கள் அதற்கு தயாராகவே இருக்கிறார்கள். இதைவிட முக்கியமாக இங்கிலாந்து அந்த ரன்களை எடுத்து விடும் என எதிரணியும் நம்பும்படி இருக்கிறார்கள்.

- Advertisement -

ஆனால் பேட்டிங் செய்ய தட்டையான ஆடுகளத்தில் கூட இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறார். அவருடைய ரிவர்ஸ் ஸ்விங் பந்துவீச்சு கலையின் மூலமாக, இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை கனவில் கூட பயமுறுத்துகிறார்.

இந்த நிலையில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பும்ரா பற்றி கூறுகையில் “ஜஸ்பிரித் பும்ரா நம்ப முடியாத ஒரு சிறப்பான பந்துவீச்சாளர். அதை அவர் மிக நீண்ட காலமாக நிரூபித்து வருகிறார். மேலும் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் அவர் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். அவருக்கு எதிராக எங்கள் பேட்ஸ்மேன்கள் எல்லோரும் தனித்தனி திட்டங்களை வைத்திருந்திருக்கிறார்கள். இந்த முறை அவரிடமிருந்து ரன் அடிக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்து இருக்கிறோம்.

இதையும் படிங்க : “பும்ராவுக்கு இந்த முறை இருக்கு.. இந்த ஸ்பெஷல் பிளான கொண்டு வர போறோம்” – பென் ஸ்டோக்ஸ் பேச்சு

ஆனால் நீங்கள் இத்தனை முயற்சி செய்தும் ஒரு பந்துவீச்சாளரிடமிருந்து ரன் அடிக்க முடியவில்லை என்றால், நீங்கள் அதற்கான பாராட்டை அந்த பந்துவீச்சாளருக்கு கொடுக்க வேண்டும். ஒவ்வொரு பந்துவீச்சாளர்களுக்கு எதிராகவும் நாங்கள் ஒவ்வொருவரும் தனித்தனியான செயல்முறையை வைத்திருக்கிறோம். யாரையும் விளையாடுவதற்கு என்று அணியாக தனித்திட்டம் எதுவும் கிடையாது. எனவே ஒவ்வொருவரும் அவர்களது சொந்த திட்டத்தின்படி விளையாட போகிறோம்” என்று கூறியிருக்கிறார்.