இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் 2வது பெரிய வெற்றி.. பங்களாதேஷ் அணிக்கு சொந்த மண்ணில் சம்பவம்

0
860
Srilanka

இலங்கை அணி பங்களாதேஷ் நாட்டில் அந்த அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்பொழுது விளையாடி வருகிறது. இலங்கை அணியின் இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை இலங்கை அணியும் அடுத்த நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் தொடரை பங்களாதேஷ் அணியும் வென்று இருந்தன.

இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்திருந்தது. இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை சீக்கிரத்தில் எழுந்து தடுமாறிய பொழுது, கேப்டன் தனஞ்செய டி சில்வா 102, கமிந்து மெண்டிஸ் 102 ரன்கள் என இருவரும் சதம் அடித்து, இலங்கை அணி 280 ரன்கள் எடுக்க காரணமாக இருந்தார்கள். பங்களாதேஷ் தரப்பில் நாகித் ராணா மற்றும் காலித் அகமது இருவரும் தலா மூன்று விக்கெட்டை கைப்பற்றினார்கள்.

- Advertisement -

தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய பங்களாதேஷ் அணி 188 ரன்கள் எடுத்து சுருண்டது. அந்த அணிக்கு தஜ்ஜுல் இஸ்லாம் 47 ரன்கள் எடுத்தார். இலங்கைத் தரப்பில் விஸ்வா பெர்னாடோ நான்கு மற்றும் கசூன் ரஜிதா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள். இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 92 ரன்கள் வலிமையான முன்னிலை பெற்றது.

இதற்கடுத்து இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணிக்கு கேப்டன் தனஞ்செய டி சில்வா 108, கமிந்து மெண்டிஸ் 164 ரன்கள் என இருவரும் மீண்டும் சதம் அடித்து அசத்தினார்கள். இதனால் இலங்கை அணி 418 ரன்கள் குவித்தது. பங்களாதேஷ் தரப்பில் மெகதி ஹசன் மிராஸ் நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

உள்நாட்டில் விளையாடும் பங்களாதேஷ் அணிக்கு இலங்கை அணி 511 ரன்கள் என்கின்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. இதை நோக்கி விளையாடிய பங்களாதேஷ் அணி நேற்று 47 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்திருந்தது. இன்று தொடர்ந்து விளையாடிய பங்களாதேஷ் அணிக்கு மொமினுல் ஹக் மட்டுமே தாக்குப் பிடித்து விளையாடினார். முடிவில் பங்களாதேஷ் அணி 182 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மொமினுல் ஹக் 87 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றார்.

- Advertisement -

இதையும் படிங்க : நேத்து ஹர்திக் செய்த எதையுமே ஏத்துக்க முடியாது.. தோல்விக்கு காரணமே அதுதான் – இர்பான் பதான் விமர்சனம்

இலங்கை அணி இந்த போட்டியை 328 ரன்கள் என்ற பிரம்மாண்ட ரன் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை அவர்களது சொந்த நாட்டில் வீழ்த்தி இருக்கிறது. இலங்கை அணியின் தரப்பில் இரண்டாவது இன்னிங்ஸ் பந்துவீச்சில் கசூன் ரஜிதா ஐந்து விக்கெட், விஸ்வா பெர்னாடோ மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள். மேலும் இதற்கு முன்பு பங்களாதேஷணியை 465 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வீழ்த்தி இருந்தது அவர்களது பெரிய ரன் வித்தியாச வெற்றியாக இருந்தது. தற்பொழுது இந்த 328 ரன் வித்தியாசம் இரண்டாவது பெரிய வெற்றியாக இலங்கை கிரிக்கெட்டுக்கு அமைந்திருக்கிறது.