நேத்து ஹர்திக் செய்த எதையுமே ஏத்துக்க முடியாது.. தோல்விக்கு காரணமே அதுதான் – இர்பான் பதான் விமர்சனம்

0
775
Irfan

நேற்று ஐபிஎல் தொடரில் தனது பழைய அணியான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு முதல் முறையாக கேப்டனாக ஹர்திக் பாண்டியா களம் இறங்கினார். இந்த இரு அணிகளையும் இவரையும் சுற்றி நிறைய விவாதங்கள் இருந்து வந்த நிலையில், கேப்டனாக மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றி ஹர்திக் பாண்டியாவுக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது.

நேற்றைய போட்டியில் 35 ஓவர்கள் வரை மும்பை இந்தியன்ஸ் அணி போட்டியை கையில் வைத்திருந்தது. கடைசி ஐந்து ஓவர்களுக்கு 43 ரன்கள் தேவை, கைவசம் ஆறு விக்கெட்டுகள் இருந்த சூழ்நிலையில், ஐந்து விக்கெட்டுகளையும் இழந்து ஆறு ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி யாரும் எதிர்பார்க்காத விதத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

- Advertisement -

நேற்றைய போட்டியில் ரஷித் கான் வீசிய ஆட்டத்தின் 18 வது ஓவரில் டிம் டேவிட் உடன் இணைந்து விளையாடிக் கொண்டிருந்த திலக் வர்மா, அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் சிங்கிள் எடுக்க முயற்சிக்கவில்லை. டிம் டேவிட்டை பந்துவீச்சாளர் முனையில் நிறுத்திவிட்டு, தாமே அந்த ஓவரை விளையாடிக் கொள்வதாக கூறினார். ஆனால் அந்த ஓவரில் வெறும் மூன்று ரன்கள் மட்டுமே கிடைத்தது. இது தோல்விக்குப் பிறகு விமர்சனங்களை அதிகமாக்கியது.

மேலும் நேற்றைய போட்டியில் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவர் பிளேவில் இரண்டு ஓவர்கள் வீசினார். மொத்தமாக மூன்று ஓவர்கள் பந்து வீசி 30 ரன்கள் விட்டுக் கொடுத்தார். மேலும் பும்ராவை நான்காவது ஓவருக்குதான் பந்து வீச அழைத்து வந்தார். அவர் உள்ளே வந்ததும் சகா விக்கெட்டை எடுத்து முதல் திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தார். மேலும் நேற்று நான்கு ஓவர்களுக்கு 14 ரன்கள் மட்டுமே தந்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி, 180 ரன்கள் மேல் தாண்டும் நிலையில் இருந்த குஜராத் அணியை, 168 ரன்களில் நிறுத்த உதவி செய்தார்.

இதுவெல்லாம் சேர்ந்து ஹர்திக் பாண்டியா கேப்டன்சி மீது விமர்சனங்களை உருவாக்கி வருகிறது. இதுகுறித்து இர்பான் பதான் பேசும் பொழுது “மும்பை இந்தியன்ஸ் அணி இலக்கைத் துரத்தும் பொழுது, அவர்கள் டிம் டேவிட்டை மேலே அனுப்பினார்கள். அப்பொழுது ரஷீத் கானுக்கு ஒரு ஓவர் மீதம் இருந்தது. இருந்தும் கூட டேவிட் மேலே அனுப்பப்பட்டார். ஒருவேளை நீண்ட நாட்களாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்த ஹர்திக் பாண்டியா ரஷீத் கானை எதிர்கொள்ள விரும்பாமல் இருந்திருக்கலாம்.

- Advertisement -

இதையும் படிங்க : 4 டி20 போட்டி 39 ரன்.. சூரியகுமார் இடத்தில் ஆடிய நமன் திர் யார்? வாய்ப்பு கிடைத்தது எப்படி

ஆனால் அனுபவம் வாய்ந்த ஒரு இந்திய பேட்ஸ்மேன் பெவிலியனில் அமர்ந்து கொண்டு, வெளிநாட்டு வீரர் ஒருவரை ரஷீத் கானுக்கு அழுத்தம் கொடுக்க அனுப்பி வைத்ததை நான் ஏற்றுக் கொள்ளவே மாட்டேன். அந்த இடத்தில் ஒரு டிரிக்கை தவற விட்டார்கள். ஹர்திக் பாண்டியா நேற்றைய போட்டியில் பெரிய தவறுகளை செய்தார். அவர் பவர் பிளேவில் இரண்டு ஓவர்கள் பந்து வீசியதோடு, பும்ராவையும் தாமதமாக கொண்டு வந்தார்” என்று விமர்சனம் செய்திருக்கிறார்.