1119 நாட்கள்.. ருதுராஜ் கிளாஸ்.. ராஜஸ்தானை வீழ்த்திய சிஎஸ்கே.. பிரகாசமான பிளே ஆஃப் வாய்ப்பு

0
2162
CSK

நடப்பு ஐபிஎல் தொடரின் 61வது போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பொறுப்புடன் விளையாடிய சிஎஸ்கே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ப்ளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்கிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. இந்த போட்டி நடைபெற்ற ஆடுகளம் கருப்பு மண் ஆடுகளமாக இருந்தது. இதன் காரணமாக ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு கடினமாக கொஞ்சம் மெதுவாக பந்து ஒட்டி வந்தது. இதனால் பேட்ஸ்மேன் ரன்கள் எடுப்பதில் சிரமம் ஏற்பட்டது.

- Advertisement -

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு முதல் விக்கெட்டுக்கு 43 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைந்தது. அந்த அணிக்கு ஜெய்ஸ்வால் 21 பந்தில் 24 ரன்கள், ஜோஸ் பட்லர் 25 பந்தில் 21 ரன்கள், சாம்சன் 19 பந்தில் 15 ரன்கள், துருவ் ஜுரல் 18 பந்தில் 28 ரன்கள், ரியான் பராக் ஆட்டம் இழக்காமல் 35 பந்தில் 47 ரன்கள் எடுத்தார்கள். அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது. சிமர்ஜித் சிங் 3, துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய சிஎஸ்கே அணிக்கு ரச்சின் ரவீந்தரா அதிரடியான துவக்கத்தை கொடுத்தார். அவர் 18 பந்துகளில் 27 ரன்கள், டேரில் மிட்சல் 13 பந்தில் 22 ரன்கள், மொயின் அலி 13 பந்தில் 10 ரன்கள், சிவம் துபே 11 பந்தில் 18 ரன்கள் எடுத்தார்கள்.

ஒரு முனையில் நிலைத்து விளையாடிய ருத்ராஜ் 14.1 ஓவரில் தான் சந்தித்த முப்பதாவது பந்தில் தான் முதல் பவுண்டரியை அடித்தார். இறுதிவரை களத்தில் நின்ற ருதுராஜ் 41 பந்தில் 42 ரன்கள், சமீர் ரிஸ்வி 8 பந்தில் 15 ரன்கள் எடுக்க, சிஎஸ்கே அணி 18.2 ஓவரில் இலக்கை எட்டி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்த வெற்றி 1119 நாட்களுக்குப் பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணிக்கு வந்திருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : மத்த டீம் பிளான் பத்தி எங்களுக்கு தெரியாது.. ஆனா நாங்க இத மட்டும் செஞ்சிட்டா போதும் – சிமர்ஜித் சிங் பேச்சு

இந்த வெற்றி சிஎஸ்கே அணிக்கு 13வது போட்டியில் ஏழாவது வெற்றியாகும். அடுத்து கடைசி போட்டியில் ஆர்சிபி அணிக்கு எதிராக வெற்றி பெற்றால் நேரடியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி வரும். இல்லையென்றால் ரன் ரேட் பார்க்க வேண்டிய நிலைமை வரலாம், இல்லையென்றால் டெல்லி அணியின் போட்டி முடிவை பார்க்க வேண்டி வரலாம். தற்போதைக்கு சிஎஸ்கே அணி பிளே ஆஃப் வாய்ப்பில் வலிமையாக இருக்கிறது.