1 இன்னிங்ஸ் 6 அரைசதம்.. பங்களாதேஷ் அணிக்கு தண்ணி காட்டும் இலங்கை.. இமாலய ரன் குவிப்பு

0
354
Srilanka

இலங்கை அணி தற்பொழுது பங்களாதேஷ் நாட்டில் வெள்ளைப்பந்து கிரிக்கெட் தொடர்களை முடித்துக் கொண்டு கடைசியாக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இந்த டெஸ்ட் போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. நேற்று முதல் நாள் முடிவில் இலங்கை அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இன்று தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ஓவர்களில் முதல் இன்னிங்ஸில் 531 ரன்கள் குவித்து இருக்கிறது. இதில் ஒரு சிறப்பான விஷயம் என்னவென்றால் இவ்வளவு பெரிய ரன் குவிப்பில், இலங்கை அணியில் இருந்து ஒரு பேட்ஸ்மேன் கூட அரை சதம் அடிக்கவில்லை என்பதுதான்.

இலங்கை அணிக்கு முதல் இன்னிங்ஸில் நிசான் மதுஷ்கா 57 (105), திமுத் கருணரத்தினே 86 (129), குசால் மெண்டிஸ் 93 (150), தினேஷ் சண்டிமால் 59 (104), கேப்டன் தனஞ்செய டி சில்வா 70 (111), கமிந்து மெண்டிஸ் 92* (167) ரங்கள் என ஆறு பேட்ஸ்மேன்கள் அரைசதம் அடித்தார்கள். இதில் எந்த பேட்ஸ்மேன்களும் சதத்தை நிறைவு செய்ய முடியவில்லை.

பங்களாதேஷ் அணியின் தரப்பில் பந்துவீச்சில் முன்னாள் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் 3, ஹசன் மக்மூத் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். இந்த நிலையில் தனது முதல் இன்னிங்ஸ் ஆரம்பித்த பங்களாதேஷ அணி இன்றைய ஆட்ட நாள் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 50 ரன்கள் எடுத்திருக்கிறது. மக்மத் ஹசன் ஜாய் 21 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஜாகிர் ஹசன் 28 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : ருதுராஜ்கிட்ட இந்த குவாலிட்டி இருக்கு.. இதுக்காகத்தான் அவரை கேப்டன் ஆக்கினோம் – சிஎஸ்கே பவுலிங் கோச் பேட்டி

இந்தப் போட்டியை டிரா செய்தாலும் இலங்கை தொடரை கைப்பற்றி விடும். மேலும் டி20 தொடரை கைப்பற்றி இருப்பதால், இந்த சுற்றுப்பயணம் அந்த அணிக்கு வெற்றிகரமானதாக அமையும். மேலும் இரு அணிகளுக்கும் இடையே சில ஆண்டுகளாக நடந்து வரும் சண்டையில், தற்போது தற்காலிக வெற்றி இலங்கைக்கு கிடைக்கும்.