16ஓவரில் ODI மேட்சை முடித்த இலங்கை.. ஹசரங்க 7 விக்கெட்.. ஜிம்பாப்வே படுதோல்வி!

0
274
Hasaranga

தற்பொழுது ஜிம்பாப்வே அணி வெள்ளைப்பந்து கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதற்கு இலங்கை நாட்டிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்திருக்கிறது.

இந்த சுற்றுப்பயணத்தில் தற்பொழுது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி மழையின் காரணமாக முடிவு தெரியாமல் போக, பரபரப்பான இரண்டாவது போட்டியில் இலங்கை வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த நிலையில் தொடரின் மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பு மைதானத்தில் இன்று இரவு பகல் போட்டியாக நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஜிம்பாப்வே பேட்டிங் செய்து கொண்டிருக்கும் பொழுது மழை குறுக்கிட்ட காரணத்தினால் போட்டி 27 ஓவராக குறைக்கப்பட்டு நடத்தப்பட்டது. இந்தப் போட்டியில் சில மாதங்களாக காயத்திலிருந்து விளையாடாமல் திரும்ப வந்த வனிந்து ஹசரங்கா பந்துவீச்சில் மிரட்டினார்.

ஜிம்பாப்வே அணியின் துவக்க ஆட்டக்காரர் ஜெரால்டு கும்பி மட்டும் தாக்குப்பிடித்து 29 ரன்கள் எடுத்தார். மற்ற யாரும் 17 ரன்கள் தாண்டி எடுக்கவில்லை. 22.5 ஓவர்களில் வெறும் 96 ரன்கள் மட்டும் எடுத்து ஜிம்பாபே ஆல் அவுட் ஆனது.

- Advertisement -

பந்துவீச்சில் கலக்கிய வனிந்து ஹசரங்கா 5.5 ஓவர் பந்துவீசி, 1 மெய்டன் செய்து, 19 ரன்கள் கொடுத்து, 7 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். இது அவருடைய சிறந்த ஒருநாள் கிரிக்கெட் பந்துவீச்சாக அமைந்தது.

இதற்கு அடுத்து எளிய இலக்கை நோக்கி பேட்டிங் செய்ய வந்த இலங்கை அணிக்கு சேவான் டேனியல் 12, அவிஷ்கா பெர்னாடோ 0 என ஆட்டம் இழந்தார்கள். சமர விக்கிரமா ஆட்டம் இழக்காமல் 16 ரன்கள் எடுத்தார்.

ஒரு முனையில் அதிரடி காட்டிய கேப்டன் குசல் மெண்டிஸ் 51 பந்துகளில் ஒன்பது பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உடன் ஆட்டம் இழக்காமல் 66 ரன்கள் எடுக்க, இலங்கை அணி 16.4 ஓவர்களில் வெற்றி பெற்று, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இரண்டுக்கு பூஜ்ஜியம் என கைப்பற்றியது.