இலங்கை அணியின் முதல் டெஸ்ட் வெற்றி.. WTC புள்ளி பட்டியலில் இங்கிலாந்துக்கு பரிதாபம்.. முழு தகவல்கள்

0
85
WTC

உலக கிரிக்கெட் அணிகளில் முக்கியமான அணி வீரர்களில் பெரும்பாலானவர்கள் தற்பொழுது இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் டி20 தொடரில் பங்கு பெற்று விளையாடுகிறார்கள். எனவே உலக கிரிக்கெட் முக்கிய நாடுகள் அனைத்தும் தற்பொழுது தங்களது கிரிக்கெட் அட்டவணைகளை மூடி வைத்திருக்கின்றன.

இந்த நிலையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்பொழுது இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் விளையாடி வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு தொடங்கிய இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி 328 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இருக்கிறது. மேலும் நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஓட்டத்தில் இலங்கை அணிக்கு இது முதல் வெற்றியாகும்.

- Advertisement -

2023-25 ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மிகவும் போட்டி நிலவில் வந்தது. நியூசிலாந்து அணி உள்நாட்டில் தென் ஆப்பிரிக்கா அணியை இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வென்று முதல் இடத்தை புள்ளி பட்டியலில் பிடித்தது. அதே சமயத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உள்நாட்டில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை மொத்தமாக இழந்தது.

இந்த நேரத்தில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்துக்கு எதிராக உள்நாட்டில் விளையாடி நான்குக்கு ஒன்று என இந்திய அணி கைப்பற்றியது. இதன் காரணமாக இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேற, நியூசிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்துக்கு வர, நியூசிலாந்து மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.

தற்பொழுது இலங்கை அணி பங்களாதேஷ் அணிக்கு எதிராக முதல் வெற்றியைப் பெற்றதும், பங்களாதேஷ் அணியும் தாண்டி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முன்னேறி ஐந்தாவது இடத்தை பிடித்தது. கடைசி இடத்தில் இருந்த இலங்கை ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியதால், இங்கிலாந்து அணி தற்பொழுது கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. இலங்கை அணியின் ஒரே வெற்றியை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : குஜராத்துக்கு எதிரான உத்தேச சிஎஸ்கே பிளேயிங் XI.. ருதுராஜ் அந்த 2 மாற்றங்களை செய்வாரா? – முழு அலசல்

2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்

இந்தியா – 74 புள்ளிகள் – 68.51%
ஆஸ்திரேலியா 90 புள்ளிகள் – 62.50%
நியூசிலாந்து – 36 புள்ளிகள் – 50.00%
பாகிஸ்தான் – 22 புள்ளிகள் – 36.66%
மேற்கிந்திய தீவுகள் – 16 புள்ளிகள் – 33.33%
இலங்கை – 12 புள்ளிகள் – 33.33%
பங்களாதேஷ் – 12 புள்ளிகள் – 33.33%
தென்னாப்பிரிக்கா – 12 புள்ளிகள் – 25.00%
இங்கிலாந்து – 21 புள்ளிகள் – 17.50%