ஐபிஎல் 2024

பந்து 3 வழிகளில் மட்டுமே விலகும்.. என் மாயாஜால ஸ்பின் ரகசியம் இதுதான் – மௌனம் திறக்கும் வருண்

நாளை தொடங்க உள்ள 18 வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் திருவிழாவில் முதல் போட்டியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் விளையாட உள்ளன.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் கொல்கத்தா அணியின் மாயாஜால சுழற் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி தனது பந்துவீச்சு குறித்த சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

கேகேஆர் அணியில் மாயாஜால ஸ்பின்னர்

கொல்கத்தா அணியில் முக்கிய நட்சத்திரமாக திகழும் வருண் சக்கரவர்த்தி, தனது அபார சுழற் பந்துவீச்சின் காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை கொல்கத்தா அணி வெல்வதற்கு மிக முக்கிய பங்கு வகித்தார். அதன் எதிரொலியாக அவருக்கு இந்திய அணியிலும் விரைவாக இடம் கிடைத்தது. சூரியகுமார் யாதவ் தலைமையிலான டி20 அணியில் இடம் பிடித்த அவர், தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.

அதுமட்டுமில்லாமல் தற்போது நடைபெற்று முடிந்த சாம்பியன் டிராபி தொடரிலும் கடைசி மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடி அதிக விக்கெட் வீழ்த்திய பட்டியலில் முதலிடம் பிடித்தார். இப்படி எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் வீரராக உருமாறி இருக்கும் வருண் சக்கரவர்த்தி தனது மாயாஜால பந்துவீச்சின் ரகசியம் குறித்து சில முக்கிய விஷயங்களை பேசி இருக்கிறார்.

- Advertisement -

பந்து மூன்று வழிகளில் திரும்பும்

இது குறித்து வருண் சக்கரவர்த்தி விரிவாக பேசும் போது ” கிரிக்கெட் பந்தைப் பொறுத்தவரை இடது, வலது மற்றும் நேர் என்று மூன்று வழிகளில் மட்டுமே விலக முடியும். அதை நான் அந்த பந்துகளை எவ்வாறு தேர்வு செய்கிறேன் என்பதை பொருத்ததாகும். விளையாட்டின் மிக முக்கியமான பக்கம் அந்த இடத்தில் தான் வருகிறது. எனவே அங்கு தான் நான் என்னை மேம்படுத்த முயற்சிக்கிறேன். நான் உள்ளூர் போட்டிகளில் விளையாடும் போதெல்லாம் புதிய பந்துகளில் வீச முயற்சிப்பேன்.

இதையும் படிங்க:இந்திய அணி என்னை சேர்க்காதது நல்லதுதான்.. இனி வேற ஒரு சிராஜை பார்ப்பீங்க – முகமது சிராஜ் பேட்டி

அதேபோல ஒவ்வொரு வருடமும் புதிய பந்தில் ஏதாவது ஒன்றை புதிதாக செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். கடந்த வருடம் அது நன்றாக பலனளித்தது. ஆனால் அதற்கு முன்னர் பெரிதாக அது கை கொடுக்கவில்லை. எனவே நான் எனது பந்துவீச்சில் வித்தியாசமாக ஒன்றை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து முயற்சித்து வருகிறேன்” என்று அவர் கூறியிருக்கிறார். நாளை நடைபெற உள்ள பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் வருண் சக்கரவர்த்தி மிக முக்கிய பங்கு வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பெங்களூர் அணியில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அதிகம் இருக்கிறார்கள் என்பதால், சுழற் பந்துவீச்சு நாளைய போட்டியில் பெரிய பங்கு வகிக்கும்.

- Advertisement -
Published by