ஸ்பின் ஆனது ஆனால் விளையாட முடியாத அளவுக்கு இல்லை – ஆஸ்திரேலிய கேப்டன் ஒப்புதல் வாக்குமூலம்!

0
6681
Cummings

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் இடையே பல்வேறு சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் பதில் அளித்து நடந்து முடிந்திருக்கிறது நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் போட்டி!

நாக்பூரில் இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி ரவீந்திர ஜடேஜா மற்றும் அஸ்வின் இருவரின் அபார பந்துவீச்சில் 65.3 ஓவரில் ஆல் அவுட் ஆனது. ஜடேஜா ஐந்து விக்கட்டுகள் எடுக்க லபுசேன் 49 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்த விளையாடிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா 120 ரன்கள், ஜடேஜா 70 ரன்கள், அக்சர் படேல் 84 ரன்கள் எடுக்க இந்திய அணி 400 ரன்கள் குவித்தது.

அடுத்து 223 ரன்கள் பின்தங்கி விளையாடத் துவங்கிய ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்ஸிலும் மிக மோசமாக விளையாடி 32.3 ஓவரில் 91 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் அபார வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. அஸ்வின் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்ற, ஜடேஜா மற்றும் முகமது சமி தலா இரண்டு விக்கட்டுகளை கைப்பற்றினார்கள். ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் விருதை வென்றார்

போட்டி முடிந்து பேசிய ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ” விளையாட்டு சில நேரங்களில் மிக விரைவாக நகரும். அப்போது உங்கள் டெம்போவை இழக்காமல் சரியாக நிர்வகிக்க வேண்டும். இந்தியா மிக நன்றாக விளையாடியது. இந்தியாவின் சுழற் பந்துவீச்சாளர்கள் இந்த ஆடுகளத்தில் மிக கடினமாக உழைத்து வெற்றி பெற்றார்கள். ரோகித் சர்மா தனது பேட்டிங் தரத்தை காட்டினார். எங்களது முதல் இன்னிங்சில் பந்து சுழன்றது. ஆனால் விளையாட முடியாத அளவுக்கு இல்லை” என்று கூறினார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” நாங்கள் இன்னும் ஒரு நூறு ரன்கள் சேர்த்து எடுத்திருந்தால் அப்பொழுது ஒரு அழுத்தத்தை அவர்கள் மேல் உருவாக்கி இருக்க முடியும். ஒரு தொடரை இப்படி தொடங்குவது கடினமான விஷயம். ஆனால் எங்கள் வீரர்களில் மூன்று நான்கு பேர் நல்ல விதத்தில் ஆரம்பித்தார்கள். இப்படி கிடைக்கும் ஆரம்பத்தை பெரிய அளவில் அவர்கள் மாற்ற வேண்டும். மர்பி அறிமுகப் போட்டியில் அருமையாகவும் சுவாரசியமாகவும் இருந்தார். அவர் மிகச் சிறப்பாக பந்து வீசியதோடு அதிக ஓவர்களையும் வீசினார்” என்று பாராட்டி கூறி முடித்துக் கொண்டார்!