வீடியோ- 20 பந்து.. 19 டாட்ஸ்.. 3 விக்கெட்.. உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தவர்.. யார் இந்த குட்டி ஸ்டார்க்?

0
665

ஒரு காலத்தில் வேகப்பந்துவீச்சாளர்களின் தலைநகரமாக வெஸ்ட் இண்டீஸ் விளங்கியது. அதன் பிறகு பாகிஸ்தான் அந்த இடத்திற்கு வந்தது. எனினும் 1990 பிற்காலத்தில் இருந்து இன்று வரை ஆஸ்திரேலியா மட்டும் டாப் கிளாஸ் வேகபந்துவீச்சாளர்களை உருவாக்கி வருகிறது.

தற்போது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறும் நிலையில் ஆஸ்திரேலிய அணி ஒரு அதிபயங்கர வேக பந்துவீச்சாளரை கண்டுபிடித்து இருக்கிறது. இங்கிலாந்து தற்போது 100 பந்துகளை கொண்ட தி ஹெண்டரட் தொடர் நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இதில் ஓவல் இன்கிரெடிபில்ஸ் அணிக்காக ஸ்பென்சர் களமிறங்கினார். மான்செஸ்டர் ஒரிஜினல் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் ஓவல் இன்கிரெடிபில்ஸ் அணி 100 பந்துகளில் 186 ரன்களை குவித்தது. இதில் தென் ஆப்பிரிக்க வீரர் கிளாசன் 27 பந்துகளில் 60 ரன்கள் விளாசினார்.

இதனை அடுத்து மான்செஸ்டர் ஒரிஜினல் அலி பேட்டிங் செய்ய வந்தது. 60 பந்துகளில் மான்செஸ்டர் அணி 58 பந்துகளில் ஆறு விக்கெட்டுகள் இழந்திருந்தது. இதனை அடுத்து ஸ்பென்சர் பந்து வீச வந்தார். தி ஹெண்டரட் கிரிக்கெட் தொடர் வரலாற்றில் இப்படி ஒரு வேகப்பந்து வீச்சை யாருமே பார்த்திருக்க மாட்டார்கள்.

ஆறடி உயரம் அழகிய தோற்றம் ஆனால் எரிமலையில் கக்கும் அளவிற்கு அனல் பறந்த வேகப்பந்து வீச்சு என எதிரணி வீரர்களை கதி கலங்க வைத்தார். 20 பந்துகளை இந்த ஆட்டத்தில் அவர் வீசினார். இதில் 19 பந்துகளில் பேட்ஸ்மேன்களால் ஒரு ரன் கூட எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

- Advertisement -

மேலும் மூன்று முக்கிய விக்கெட்டுகளையும் பென்சர் ஜான்சன் கைப்பற்றினார். இப்படி ஒரு வேகப்பந்து வீச்சை தி ஹெண்டரட் உட்பட எந்த டி20 தொடரிலும் யாருமே பார்த்ததில்லை என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

ஓவர் நைட்டில் ஒபாமா என்று சொல்லும் அளவிற்கு பிரபலமான ஸ்பென்சார் தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டி20 தொடரில் பங்கேற்க உள்ளார். 27 வயதே ஆன ஸ்பென்சர் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு ரவுண்டு வருவார் என பலரும் பாராட்டி வருகிறார்கள். இவருடைய பந்துவீச்சு மிட்செல் ஜான்சன் மட்டும் ஸ்டார் ஆகியோரை கலந்தது போல் இருப்பதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.