தென்ஆப்பிரிக்க டி20தொடர்.. 30 வயது இந்திய புது வீரருக்கு அடித்த அதிர்ஷ்டம்.. டர்னிங் பாயிண்ட்!

0
7892
ICT

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி தற்பொழுது தென் ஆப்பிரிக்கா நாட்டிற்கு டி20 ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் தொடர் என மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுவதற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது.

இந்த சுற்றுப்பயணத்திற்கு முறையே சூரியகுமார் யாதவ், கே எல் ராகுல் மற்றும் ரோகித் சர்மா என மூன்று கேப்டன்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த சுற்றுப்பயணத்திற்கு மூன்று தொடர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ள 3 இந்திய அணிகளிலும் பல்வேறு விதமான பரிசோதனை முயற்சிகள் செய்யப்படுகின்றன.

- Advertisement -

மிகக்குறிப்பாக அடுத்த ஆண்டு ஜூலை மாதத்தில் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடக்க இருக்கும் டி20 உலகக்கோப்பை இந்திய அணிக்கு வீரர்களை தேர்வு செய்வதற்கான பரிசோதனைகள் நடைபெறுகின்றன. மிகக்குறிப்பாக ஒரு வீரர் காயம் அடைந்தால் அவரது இடத்திற்கு யார் சரியாக இருப்பாரோ, அப்படியான மாற்று வீரர்கள் வரை எல்லோருக்கும் வாய்ப்பு கொடுப்பது என முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இதன்படியே அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடருக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் விக்கெட் கீப்பர்களாக இசான் கிஷான் மற்றும் ஜிதேஷ் சர்மா இருவர் இடம் பெற்று இருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இருவருக்குமே வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதில் இஷான் கிஷான் மேல் வரிசையில் சிறப்பாக செயல்பட்டார். இரண்டு போட்டிகளில் கீழ் வரிசையில் ஒரு ஆட்டத்தில் ஜிதேஷ் சர்மா சிறப்பாக செயல்பட்டார்.

மேலும் தற்பொழுது இந்திய அணியில் துவக்க இடத்திற்கு ஜெய்ஸ்வால், கில், ருத்ராஜ் மற்றும் ரோகித் சர்மா என 4 பேர் இப்போதைக்கு இருக்கிறார்கள். எனவே இசான் கிஷானுக்கு விளையாடும் அணியில் மேல் வரிசையில் இடம் கிடைப்பது கடினம். மூன்றாவது இடத்தில் விளையாட தற்போது விராட் கோலி ஸ்ரேயாஸ் மற்றும் திலக் வர்மா என மூன்று பேர் இருக்கிறார்கள். எனவே இப்போதைக்கு இந்த இடத்திலும் விளையாடுவது கடினம்.

- Advertisement -

இந்த காரணத்தினால் தற்போது இந்திய அணியில் இரண்டாவது விக்கெட் கீப்பராக இடம் பெற்று இருக்கும் கீழ் வரிசையில் விளையாடும் ஜிதேஷ் சர்மாவுக்கு அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. அவர் பேட்டிங்கில் ஆறாவது இடத்தில் வந்து விளையாடுவார் என்பதால், தென் ஆப்பிரிக்கா டி20 தொடர் மட்டும் இல்லாமல், டி20 உலகக்கோப்பை தொடரிலும் இவர் விளையாடினால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

தற்பொழுது 30 வயதாகும் விதர்பா மாநில அணிக்காகவும், ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடும் ஜிதேஷ் சர்மா, பந்தை வலிமையாக அடிக்கும் பவர் ஹிட்டிங் முறையில் மிகவும் சிறப்பாக தயாராகி இருக்கிறார். கடைசி கட்டத்தில் டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதற்காகவே என பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட வீரராக இருக்கிறார்.

இவர் ஐபிஎல் தொடரில் 2016 மற்றும் 17 ஆம் ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு விளையாடி வருகிறார். இதில் 24 இன்னிங்ஸ்களில் 543 ரன்களை 160 ஸ்ட்ரைக்ரேட்டில் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தமாக ஐபிஎல் தொடரில் 44 பவுண்டரிகள் மற்றும் 33 சிக்ஸர்கள் நொறுக்கி இருக்கிறார். இதன் காரணங்களால் இந்திய டி20 கிரிக்கெட் அணியில் விளையாடும் வாய்ப்பு இவருக்கு மிகவும் பிரகாசமாக இருக்கிறது!