தென் ஆப்பிரிக்க தொடர்.. 2 இந்திய நட்சத்திர வீரர்கள் திடீர் விலகல்.. கடைசி நேரத்தில் அணிக்கு பின்னடைவு!

0
593
ICT

தற்பொழுது மூன்று கேப்டன்களை கொண்டு, மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதற்கு இந்திய கிரிக்கெட் அணிகள் தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது.

இதில் முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி சூரியகுமார் தலைமையில் ஒன்றுக்கு ஒன்று என சமன் செய்தது.

- Advertisement -

இந்த நிலையில் இதற்கு அடுத்து நாளை கே எல் ராகுல் தலைமையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இளம் இந்திய அணி களமிறங்குகிறது.

இதற்கு அடுத்த வாரத்தில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் அனுபவம் வாய்ந்த இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் விளையாட இருக்கிறது.

இந்திய அணி 2021 ஆம் ஆண்டு மேற்கொண்ட தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் சுற்றுப்பயணம் மிக மோசமான அனுபவமாக அமைந்தது. அந்த நேரத்தில் மிகவும் அனுபவம் குறைவாக இருந்த தென் ஆப்பிரிக்க அணியிடம் இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர்களை இழந்து வந்தது.

- Advertisement -

இந்த நிலையில் இந்த முறை அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய அணி செயல்படும் என்று எதிர்பார்த்து இருந்த வேளையில், ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியில் இடம் பெற்று இருந்த இரண்டு முக்கியமான நட்சத்திர வீரர்கள் விலகி இருக்கிறார்கள்.

நாளை தொடங்க உள்ள ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து தீபக் சகர் வெளியேறியிருக்கிறார். அவருடைய தந்தை உடல்நலம் இல்லாமல் இருக்கின்ற காரணத்தினால், அவர் தொடரில் இருந்து விலகி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இதேபோல் ஒருநாள் தொடருக்கு அடுத்த தொடங்க உள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து, இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி காலில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக விலகி இருக்கிறார்.

தீபக் சகர் புதிய பந்தில் வீசக்கூடிய பேட்டிங் செய்ய முடிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே டி20 உலக கோப்பைக்கு முன்பாக இவர் வெள்ளைப்பந்து தொடர்களில் விளையாடுவது முக்கியம். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்ல தென் ஆப்பிரிக்க தொடர் முக்கியமானது. இந்த வகையில் முகமது சமி விலகல் இந்திய அணிக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது!