2024 ஐபிஎல்: ரியான் பராக் புதிய சாதனை.. ஸ்பெஷல் லிஸ்டில் 5வது வீரர்.. சாம்சனையும் தாண்டினார்

0
280
Riyan

நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தி மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த போட்டியில் இந்த வருட ஐபிஎல் தொடரில் ரியான் பராக் புதிய சாதனை படைத்திருக்கிறார்.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் இங்கிலாந்து திரும்பி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. துவக்க ஆட்டக்காரர்களாக வந்த ஜெய்ஸ்வால் 4(4), கோலர் கேட்மோர் 18(23) சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தார்கள்.

- Advertisement -

வழக்கம் போல் மூன்றாவது இடத்தில் வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் பொறுமையாக விளையாடி 18 பந்தில் 18 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். நடுவில் அனுப்பப்பட்ட அஸ்வின் 19 பந்தில் 28 ரன்கள் எடுத்தார். அடுத்து துருவ் ஜுரல் கோல்டன் டக், ரோமன் பவல் 4 பந்தில் 5 ரன், டோனவன் பெரீரா 8 பந்தில் 7 ரன் என வரிசையாக வெளியேறினார்கள்.

இந்த நிலையில் ஒரு பக்கத்தில் ரியான் பராக் நிலைத்து நின்று விளையாடி, 2024 ஐபிஎல் தொடரில் 500 ரன்கள் கடந்தார். மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சஞ்சு சாம்சன் 504 ரன்கள் குவித்து முதலிடத்தில் இருந்தார். இந்த ரன்களையும் ரியான் பராக் தாண்டினார். இன்று 500 ரன்களை தாண்டியதன் மூலம், நடப்பு ஐபிஎல் தொடரில் 500 ரன்கள் தாண்டிய அன்கேப்டு வீரர் என்ற சாதனையை படைத்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : விராட் கோலி பாகிஸ்தான்னா வேற மாதிரி.. ஒரே ஒரு வழி இருக்கு அதை செய்யுங்க – மிஸ்பா உல் ஹக் அறிவுரை

20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி ஒன்பது விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது. ரியான் பராக் அதிகபட்சமாக 34 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார். சாம் கரன், ராகுல் சாஹர் மற்றும் ஹர்சல் படேல் மூவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்

ஐபிஎல் தொடரில் 500 ரன்கள் தாண்டிய அன்கேப்டு வீரர்கள்:

2008 – ஷான் மார்ஸ்
2018 – சூரியகுமார் யாதவ்
2020 – இஷான் கிஷான்
2023 – ஜெய்ஸ்வால்
2024 – ரியான் பராக்

- Advertisement -