டி20 WC.. மறக்க ட்ரை பண்றேன் ஆனா முடியல.. தோத்தாலும் இந்த ஒரு விஷயத்துனால ஆறுதலா இருக்கு.. ஸ்டப்ஸ் பேட்டி

0
1628

டெஸ்ட் தொடரை முடித்த கையோடு தென்னாபிரிக்க அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி இதே வெஸ்ட் இண்டீஸில் இந்திய அணிக்கு எதிராக இறுதி போட்டியில் தோல்வி அடைந்தது.

இந்த நிலையில் தென்னாப்பிரிக்க அணியின் பேட்ஸ்மேன் ஆன ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் இந்திய அணிக்கு எதிரான டி20 உலக கோப்பை இறுதி போட்டியின் தோல்வி குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் நான் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் பங்கு பெற்று விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி இருக்கிறது. இந்த நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான மூன்று டி20 போட்டிகள் வருகிற 24-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.

இதற்காக இரண்டு அணி வீரர்களும் தற்போது தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். தென்னாபிரிக்க அணி இதற்கு முன்னதாக டி20 உலக கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியிடம் இறுதிப் போட்டியில் எதிர்பாராத தோல்வியை தழுவியது. ஜெய்ப்பதற்கு நல்ல நிலையில் இருந்த போதிலும் இறுதிக்கட்டத்தில் ஏற்பட்ட சொதப்பலால் மீண்டும் ஒருமுறை கோப்பையை வெல்லாமல் வெளியேறியது.

- Advertisement -

இதுகுறித்து தென்னாபிரிக்க அணி வீரர் ஸ்டெப்ஸ் கூறும்போது “நீங்கள் விரும்பாத போது தான் உலகக் கோப்பை இறுதி போட்டி வரும். என்னால் முடிந்த வரை அதனை மறக்க முயற்சித்தேன். ஆனால் அது எளிதான காரியம் கிடையாது. அதனைப் பற்றி திரும்பவும் கேட்பது அதைவிட கடினமான விஷயம். மீண்டும் கரீபியனுக்கு வரும்போது அதைப் பற்றிய நினைவுகள் வரக்கூடும். ஆனால் அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்ற இடத்தில் இறுதி போட்டி விளையாடியதால் அந்த தொடர் குறித்த நல்ல நினைவுகளும் நிச்சயம் இருக்கும்.

இந்த முழு உலகக்கோப்பை தொடரும் எனக்கும், அணிக்கும் நல்ல இனிமையான அனுபவமாக இருந்தது என்று நினைக்கிறேன். நாங்கள் வெற்றி பெறுவதற்கான வழிகளை கண்டுபிடிக்க முயற்சித்தோம். ஆனால் அது வெளியே தெரியாத திறமையாக உள்ளது என்று நினைக்கிறேன். சில மோசமான வெற்றிகளையும் பெற்றோம்.

இதையும் படிங்க:ரோகித் உங்களுக்கு நிறைய சுதந்திரம் தருவார்.. ஆனா ஒழுங்கா நடக்கலனா இதுதான் நடக்கும் – முகமது ஷமி வெளியிட்ட தகவல்

ஒரு அணியாக அதிலிருந்து நிறைய விஷயங்களை எடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். அது நமக்கு நிறைய குணங்களை வெளிப்படுத்தியது” என்று கூறி இருக்கிறார். இந்த இரண்டு அணிகளுக்கிடையே முதல் டி20 போட்டி வருகிற 24-ஆம் தேதியும், இரண்டாவது போட்டி 25ஆம் தேதியும், மூன்றாவது மற்றும் கடைசி போட்டி 28ஆம் தேதியும் நடைபெற உள்ளது.

- Advertisement -