ரோகித் உங்களுக்கு நிறைய சுதந்திரம் தருவார்.. ஆனா ஒழுங்கா நடக்கலனா இதுதான் நடக்கும் – முகமது ஷமி வெளியிட்ட தகவல்

0
212
Shami

இந்தியாவில் சியட் கிரிக்கெட் விருதுகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பல இந்திய வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில் கலந்துகொண்ட இந்திய நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி தனது கேப்டன் ரோகித் சர்மா பற்றிய மிக முக்கிய கருத்து ஒன்றை கூறியிருக்கிறார்.

ரோகித் சர்மா சில நேரம் களத்தில் மொத்த இந்திய கேப்டன்களை விட தனது வீரர்களிடம் ஆக்ரோஷமாக பேசக்கூடியவர். பல நேரங்களில் ரோகித் சர்மா மிகவும் நட்புடன் வீரர்களுடன் இருந்தாலும் கூட, சில நேரத்தில் மைதானத்திலேயே தனது அதிருப்தியை தெரிவித்து விடுவார். தற்பொழுது இது குறித்து தான் முகமது ஷமி கூறி இருக்கிறார்.

- Advertisement -

ரோகித் சர்மாவின் இன்னொரு பக்கம்

பொதுவாக ரோகித் சர்மா களத்திற்கு வெளியே இந்தியாவின் மிகச் சிறந்த கேப்டனாக இருக்கக்கூடியவர் என பலரும் கூறுவார்கள். அந்த அளவிற்கு தாமாகவே ஒவ்வொரு வீரரிடமும் சென்று பேசி அவர்களது எண்ணங்களை அறிந்து தனிப்பட்ட முறையில் நிறைய உதவிகளை செய்யக்கூடியவர்.

அதே சமயத்தில் களத்தில் சில நேரம் வீரர்களிடம் கடுமையாகவும் நடந்து கொள்வார். 2022 ஆசியக் கோப்பை தொடரில் எளிய கேட்ச் வாய்ப்பை தவறவிட்ட அர்ஸ்தீப் சிங், மற்றும் இந்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் மார்ஷ் கேட்ச்சை விட்ட ரிஷப் பண்ட் ஆகியோரிடம் ரோகித் சர்மா கடுமையாக நடந்து கொண்டதை நாம் பார்த்திருக்கலாம்.

- Advertisement -

ரோகித் சர்மா இப்படித்தான்

இந்த நிலையில் ரோகித் சர்மா குறித்து முகமது ஷமி கூறும் பொழுது “ரோகித் சர்மாவிடம் சிறந்த விஷயம் என்னவென்றால் அவர் உங்களுக்குச் சுதந்திரம் கொடுப்பார். ஆனால் நீங்கள் அவரது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என்றால் அவரிடம் இருந்து எதிர் வினைகள் வர ஆரம்பிக்கும்.

இதையும் படிங்க :

அவர் உங்களிடம் வந்து இதை செய்திருக்க வேண்டும் அல்லது நீங்கள் இதைச் செய்ய வேண்டும் என்று கூறுவார். ஆனால் அதற்குப் பிறகும் நீங்கள் அதை செய்யவில்லை என்றால், நீங்கள் திரையில் பார்த்தது போல சில விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கும். அவர் உங்களுக்கு எதிர்வினைகள் செய்வார். நீங்கள் அவர் சொல்வதை புரிந்து கொண்டு செயல்பட்டால் சிறப்பான விஷயங்கள் வெளியில் வரும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -