உலக கிரிக்கெட்

அஸ்வின் கணிப்பை உண்மை ஆக்கிய 30 வயது வீரர்.. 9வது வீரராக பேட்டிங்கில் அபார சாதனை.. பாக் தென்னாப்பிரிக்கா டெஸ்ட்

பாகிஸ்தான் அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் 30 வயது தென் ஆப்பிரிக்கா அறிமுக வீரர் கார்பின் போஸ் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என இரண்டு துறைகளிலும் கலக்கி வருகிறார்.

- Advertisement -

இதன் மூலமாக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினின் கணிப்பை உண்மையாக இருக்கிறார்.

பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையே முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியை தனது சிறப்பான பந்துவீச்சு மூலமாக தென் ஆப்பிரிக்கா வீரர் கார்பின் போஸ் 211 ரன்களுக்கு ஆட்டம் இழக்க செய்தார். தனது அறிமுகப் போட்டியில் தான் வீசிய முதல் பந்திலேயே பாகிஸ்தான் கேப்டன் சான் மசூத் விக்கெட் வீழ்த்திய இவர் அதற்குப் பின்னர் மூன்று விக்கட்டுகள் வீழ்த்தினார்.

மிடில் வரிசையில் ஷகில் மற்றும் இறுதி கட்டத்தில் ஆமர் ஜமால் மற்றும் நசிம்ஷா ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். அதுமட்டுமல்லாமல் பேட்டிங்கில் ஒன்பதாவது வரிசையில் களமிறங்கி 93 பந்துகளில் 15 பவுண்டரியுடன் 81 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒன்பதாவது வரிசையில் களமிறங்கி அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். தென்னாப்பிரிக்காவுக்கு சிறந்த அறிமுகமாக இருக்கும் நிலையில் இவர் ஐபிஎல் தொடரில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஆனால் ஒரு போட்டி கூட ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சுழல் ஜாம்பவான் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இவரது திறமையை போட்டி நடைபெறும் நாள் அன்று கணித்திருக்கிறார். பந்துவீச்சில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியதாக கூறிய அஸ்வின் பேட்டிங்கிலும் சிறப்பான சராசரி வைத்திருக்கிறார் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியீட்டு நிலையில் அதை தற்போது மேற்கோள் காட்டி ஒரு பதிவை இட்டு இருக்கிறார்.

இதையும் படிங்க:81 ரன் 5 விக்கெட்.. ஆல் ரவுண்டராக ஜொலிக்கும் புதுமுகம்.. சிக்கலில் பாகிஸ்தான் அணி.. தென்னாபிரிக்க முதல் டெஸ்ட்

அதில் அவர் கூறியிருப்பதாவது “கார்பின் போஸ் மூன்று வருடங்களுக்கு முன்பு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்திருக்கிறார். மேலும் அவர் ஒரு சிறப்பான வீரராக இருக்கிறார். முதல் தர கிரிக்கெட்டில் பந்துவீச்சில் நன்றாக தொடங்கிய அவர் பேட்டிங்கிலும் 40க்கும் அதிகமான சராசரியை வைத்திருக்கிறார் என்பது நினைவு கூறத்தக்கது” என்று கூறினார். அவர் கூறிய நாள் அன்று தனது அறிமுக போட்டியில் விளையாடிய கார்பின்போஸ் பேட்டிங் மற்றும் பந்து என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு அவரது வார்த்தைகளை உண்மையாக்கி இருக்கிறார்.

- Advertisement -
Published by