81 ரன் 5 விக்கெட்.. ஆல் ரவுண்டராக ஜொலிக்கும் புதுமுகம்.. சிக்கலில் பாகிஸ்தான் அணி.. தென்னாபிரிக்க முதல் டெஸ்ட்

0
435

பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிற நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் தென் ஆப்பிரிக்கா அணியில் அறிமுக வீரராக களம் இறங்கிய கார்பின் போஸ் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் தனது சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

தென் ஆப்பிரிக்கா பாகிஸ்தான் டெஸ்ட் தொடர்

இந்த இரண்டு அணிகளுக்கு இடையே டி20 மற்றும் ஒரு நாள் தொடர் ஏற்கனவே நடைபெற்ற முடிந்த நிலையில் முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் நேற்று துவங்கியது. இதில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் தென்னாப்பிரிக்க அணி வீரர்களின் சிறப்பான பந்துவீச்சால் 211 ரன்கள் மட்டுமே குவித்து ஆட்டம் இழந்தது. இதில் பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக கம்ரான் குலாம் 54 ரன்கள் குவித்தார். பந்துவீச்சில் டேன் பீட்டர்சன் 5 விக்கெட்டுகளும் கார்பின் போஸ் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள்.

அதற்குப் பிறகு தென்னாப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸ் துவங்கியது. தென் ஆப்பிரிக்க அணியை பொறுத்தவரை தொடக்க வீரர் மார்க்ரம் மட்டுமே டாப் வரிசை பேட்ஸ்மேன்களில் ஓரளவு நிலையாக நிலைத்து நின்று ரன்கள் குவிக்க, அதற்குப் பின்னால் வந்த வீரர்கள் வரிசையாக நடையை கட்டினார்கள். இருப்பினும் அணியின் கேப்டன் பவுமா 31 ரன் மற்றும் பெடிங்காம் 30 ரன்னில் வெளியேற பந்துவீச்சில் கலக்கிய கார்பின்போஸ் பேட்டிங்கிலும் சிறப்பான பங்களிப்பினை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

சிறப்பாக விளையாடிய தென் ஆப்பிரிக்க வீரர்

93 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் 15 பவுண்டரியுடன் 81 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்ததால் தென்னாப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் 301 ரன்கள் குவித்தது. அதற்குப் பிறகு தனது இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடி வரும் பாகிஸ்தான் அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் குவித்த நிலையில் இரண்டாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது.

இதையும் படிங்க:சிராஜ்கிட்ட இதை வெளிப்படையா சொல்லிட்டு.. டீமை விட்டு தூக்குங்க – சுனில் கவாஸ்கர் விமர்சனம்

தொடக்க ஆட்டக்காரர் சைம் அயூப் 27 ரன்கள் அடித்த நிலையில் ரபாடாவின் பந்துவீச்சில் வெளியேற, மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் ஷான் மசூத் 28 ரன்கள் அடித்த நிலையில் மார்க்கோ ஜான்சனின் பந்துவீச்சில் வெளியேறினார். அதற்குப் பின்னர் களமிறங்கிய கம்ரான் குலாம் 4 ரன்னில் திரும்ப மார்க்கோ ஜான்சனின் பந்துவீச்சில் ஆட்டம் இழக்க பாபர் அசாம் 16 ரன் மற்றும் ஷகீல் 8 ரன்னில் களத்தில் இருக்க இரண்டாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. இன்னும் மூன்று நாட்கள் ஆட்டம் மீதம் இருக்கும் இடையில் எந்த அணி வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

- Advertisement -