WTC பைனல்.. எங்களை நினைச்சா வருத்தமா இருக்கு.. ஆஸியை ஜெயிக்க இனி இதுதான் ஒரே வழி.. தென் ஆப்பிரிக்க வீரர் பேட்டி

0
649

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.

இதில் இரண்டாம் நாள் ஆட்ட நேரம் முடிவிற்கு பிறகு தென்னாபிரிக்க அணியின் வேக பந்துவீச்சாளர் லுங்கி இங்கிடி சில முக்கிய கருத்துகளை பேசி இருக்கிறார்.

- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியானது லண்டனில் நேற்று தென்னாபிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே துவங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீசுவதாக அறிவிக்க, பேட்டிங் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 212 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. ஆஸ்திரேலியா அணியை பொறுத்தவரை அதிகபட்சமாக இறுதிக்கட்ட பேட்ஸ்மேன் வெப்ஸ்டர் 72 ரன்கள் மற்றும் ஸ்மித் 66 ரன்கள் குவித்தனர்.

தென் ஆப்பிரிக்கா அணியை பொறுத்தவரை பந்துவீச்சில் ரபாடா அதிகபட்சமாக 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அதற்குப் பிறகு தனது முதல் இன்னிங்ஸ் களம் இறங்கிய தென்னாப்பிரிக்கா அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 43 ரன்கள் எடுத்திருந்தது. அதற்குப் பிறகு நேற்று இரண்டாம் நாள் ஆட்டத்தை துவங்கிய தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்திருந்தது.

- Advertisement -

இதை நாங்கள் செய்தாகணும்

மேற்கொண்டு 17 ரன்கள் சேர்ப்பதற்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் இழந்து தென்னாபிரிக்க அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியது. இதனால் 74 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா அணி மீண்டும் தங்களது இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்க இரண்டாம் நாள் ஆட்டநேரம் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் குவித்து 218 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது. எனவே மீதமுள்ள இரண்டு விக்கெட்களையும் விரைவாக கைப்பற்றி தென்னாபிரிக்க அணி வெற்றி பெற முயற்சிக்க வேண்டும் என அதன் வேகப் பந்துவீச்சாளர் இங்கிடி கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:MLC 2025: மீண்டும் வந்தாச்சு அமெரிக்காவின் ஐபிஎல்.. இந்தியாவில் எந்த சேனலில் பார்க்கலாம்.?. முழு விவரம்

இது குறித்து அவர் கூறும் போது “இப்போது ஆட்டம் சமநிலையில் உள்ளது. அவர்கள் வசம் இரண்டு விக்கெட்டுகள் இருக்கிறது. அந்த இரண்டையும் விரைவாக வீழ்த்தி ஆஸ்திரேலியா அணியை 225 ரன்கள் கட்டுப்படுத்தி நாங்கள் வெற்றி இலகை நோக்கி விளையாட வேண்டும். அப்போதுதான் மக்கள் தங்கள் பணத்திற்கான மதிப்பை பெறுவார்கள். டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இதைத்தான் கொண்டு வர வேண்டும் என நினைக்கிறேன். இந்த போட்டியில் நிறைய பேர் தங்கள் கைகளை உயர்த்தியுள்ளார்கள். ஆஸ்திரேலியா அணியின் முதல் இன்னிங்ஸ் ரன்களை நாங்கள் எட்ட முடியாதது வருத்தத்தை அளிக்கிறது. உலகத் தரமான பந்துவீச்சை நாங்கள் எதிர்கொண்டோம். நாங்கள் செய்யும் ஒவ்வொரு தவறும் அவர்களுக்கு ஒரு வாய்ப்பாகும். அதற்கான பெருமையை வழங்க வேண்டும்” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -