வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய போதிலும், பேட்டிங்கில் சொதப்பியதால் இந்த போட்டியில் நெருங்கி வந்து தோல்வியை சந்தித்துள்ளது.
தென் ஆப்பிரிக்கா அணியினர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டு துறைகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணியை விட சிறப்பாக செயல்பட்டு இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்றிருக்கின்றனர்.
இந்த இரண்டு அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 160 ரன்களுக்கு அவுட் ஆனது. அதற்குப் பிறகு முதல் இன்னிங்சை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் தென்னாப்பிரிக்க அணியினரின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 144 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
அதற்குப் பிறகு இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கிய தென்னாபிரிக்கா 224 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட்டுகள் இழந்த நிலையில், மூன்றாவது நாள் ஆட்டத்தை துவக்கியது. மூன்றாவது நாளில் வெஸ்ட் இண்டீஸ் அணியினர் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி மேற்கொண்டு 22 ரன்கள் சேர்ப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா அணியின் வெரின் அதிகபட்சமாக 59 ரன்கள் குவித்தார்.
பந்துவீச்சில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்திய வெஸ்ட் இண்டீஸ் அணியின் சீல்ஸ் 18.4 ஓவர்களில் ஆறு ஓவர்கள் மெய்டனுடன் 61 ரன்கள் விட்டுக் கொடுத்து ஆறு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் 262 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 62 ரன்கள் சேர்ப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை பறி கொடுத்தது.
அதற்குப் பிறகு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழ வெஸ்ட் இண்டீஸ் அணியின் தோல்வியை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. அதிகபட்சமாக மிடில் வரிசை பேட்ஸ்மேன் மோட்டி ஓரளவு அதிரடியாக விளையாடி 59 பந்துகளில் 45 ரன்கள் குவித்தார். கடந்த இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிய ஹோல்டர் இந்த இன்னிங்ஸில் டக் அவுட் ஆகிய ஏமாற்றம் அளித்தார்.
இதையும் படிங்க:இந்தியாவுக்கு எதிரா நான் பண்ணாத ஒரே விஷயம் இதுதான்.. சம்மர்ல எங்களுக்கு இந்த விஷயம் சவாலா இருக்க போகுது – கம்மின்ஸ் பேட்டி
இரண்டாவது இன்னிங்ஸில் 181 ரன்கள் இருந்தபோது மேற்கொண்டு 41 ரன்கள் சேர்ப்பதற்குள் கடைசி நான்கு விக்கெட்டுகளை இழந்ததது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 222 ரன்கள் மட்டுமே குவித்து 40 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி இரண்டாவது போட்டியிலும் தோல்வி அடைந்தது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுவதுமாக வெற்றி பெற்றுள்ளது தென்னாபிரிக்கா அணி. இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட மல்டர் ஆட்டநாயகன் விருதையும் தொடரில் சிறப்பாக செயல்பட்ட கேசவ் மகாராஜ் தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.






