இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் ட்ராபி கிரிக்கெட் தொடர் வருகிற நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில் இந்த தொடருக்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டனான பேட் கம்மின்ஸ் பார்டர் கவாஸ்கர் டிராபி குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
ஆஸ்திரேலியா மண்ணில் கடந்த இரண்டு முறை பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இந்திய அணி வெற்றி பெற்று வரலாறு படைத்தது. முதல் முறை விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், அதற்கு பிறகு ரகானே தலைமையில் ஆன இந்திய அணியும் வெற்றி பெற்று அடுத்தடுத்து வரலாறு படைத்தது. இந்த சூழ்நிலையில் இந்த வருட இறுதியில் நடைபெற உள்ள தொடரை எப்படியாவது வென்று விட வேண்டும் என்று ஆஸ்திரேலியா அணியினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
ஆஷஸ் டெஸ்ட் தொடர் முதல் உலகக்கோப்பை வரை முக்கியமான கோப்பைகளை வென்றுள்ள ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தலைமையில் இதுவரை பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரை வென்றதில்லை. இதனால் இந்தத் தொடருக்கு தயாராகும் விதமாக ஏழு முதல் எட்டு வாரங்கள் வரை ஓய்வில் இருக்கப் போவதாக அறிவித்திருக்கிறார். நான் உட்பட அணியில் இருக்கும் வீரர்களும் இதுவரை இந்தத் தொடரை வென்றதில்லை என்று கூறி சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இது குறித்து கம்மின்ஸ் விரிவாக கூறும்போது “இது இதற்கு முன்னர் நான் இதுவரை வெல்லாத ஒரு கோப்பையாகும். எங்கள் ஆஸ்திரேலியா அணியில் இதுவரை பலர் வெல்லாத ஒரு கோப்பை இதுவாகும். கடந்த சில வருடங்களாகவே டெஸ்ட் தொடரில் அற்புதமான சாதனைகளை நாங்கள் செய்து வருகிறோம்.சொந்த மண்ணில் நடக்கும் ஒவ்வொரு தொடரிலும் சாதிப்பதற்கு ஒவ்வொரு முறையும் வருகிறீர்கள்.
ஆனால் அதற்கு அணியின் மேல் மட்டத்திலிருந்து முழு தீவிரத்தையும் கொடுத்து விளையாட வேண்டியது அவசியம். இதுதான் இந்த கோடை காலத்தில் நமக்கு இருக்கும் சவாலாகும். இந்தியா மிகவும் திறமையான பக்கத்தை கொண்டுள்ளது. நாங்கள் அவர்களுடன் நிறைய கிரிக்கெட் விளையாடி இருக்கிறோம். அதனால் அவர்களை நாங்கள் நன்கு அறிவோம். ஆனால் தற்போது நாங்கள் மிகவும் நல்ல நிலையில் இருப்பதைப் போல உணர்கிறோம்” என்று கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க:6 விக்கெட்.. படிக்கல் அதிரடி வீண்.. மனிஷ் பாண்டே ஹூப்ளி டைகர்ஸ் அணி வெற்றி.. மகாராஜா டிராபி 2024
இதனால்தான் ஆஸ்திரேலியா அணி வீரர் பேட் கம்மின்ஸ் ஆஸ்திரேலியா அணி அடுத்ததாக விளையாட உள்ள ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறார். இதனால் இந்திய அணிக்கு எதிரான இந்த தொடர் எவ்வளவு முக்கியம் என்பதை அவரது ஓய்வு நன்றாகவே உணர்த்துகிறது.






