நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, இந்திய அணியின் 25 வயதான விக்கெட் கீப்பர் பேட்டர் துருவ் ஜூரெலின் சிறந்த பேட்டிங்கை இந்திய அணியின் முன்னாள் உதவி கோச் சஞ்சய் பங்கார் பாராட்டிப் பேசி இருக்கிறார்.
இந்திய அணி சமீபத்தில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது. இந்த தொடரில் ஸ்பெஷலிஸ்ட் பேட்டராக களமிறங்கிய துருவ் ஜூரெல், ஒரு செஞ்சுரி மற்றும் ஒரு ஹாஃப் செஞ்சுரி உட்பட 173 ரன்கள் எடுத்து அபாரமாக செயல்பட்டார். மேலும் இவர் இதுவரை விளையாடிய 12 டெஸ்ட் போட்டிகளில் 2 செஞ்சுரி மற்றும் 2 ஹாஃப் செஞ்சுரிகளுடன் 40.68 ஆவரேஜ் வைத்துள்ளார்.
நியூசிலாந்து மண்ணில் நடைபெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பிற்கு இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானதாகும். தற்போதைய புள்ளிப்பட்டியலில் இந்திய அணி 5-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் பேட்டிங் லைன்-அப் மற்றும் துருவ் ஜூரெல் குறித்து சஞ்சய் பங்கார் பேசும்போது “அணி தற்போது நன்றாக செட்டிலாகிவிட்டது. ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அணியில் இல்லாத சூழலில், ஆரம்பத்தில் இயல்பு நிலைக்கு வர சிறிது காலம் தேவைப்பட்டது. ஆனால் துருவ் ஜூரெல் அணிக்கு கிடைத்த ஒரு நல்ல அடிஷனாக இருக்கிறார். அவர் ஒரு ஸ்பெஷலிஸ்ட் பேட்டராகவும் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்துள்ளார்” என்று கூறி இருக்கிறார்.
மேலும் இந்திய அணியின் பிளேயிங் லெவன் தேர்வு குறித்து சஞ்சய் பங்கார் பேசும்போது “களமிறங்கும் 6 பேட்டர்களும் அனைத்து கண்டிஷன்களிலும் சிறப்பாக செயல்பட்ட எக்ஸ்பீரியன்ஸ் கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஏழாம் நம்பரில் ரவீந்திர ஜடேஜா விளையாடி, அவரைத் தொடர்ந்து 4 ஃபாஸ்ட் பௌலர்கள் அல்லது 3 ஃபாஸ்ட் பௌலர்கள் மற்றும் ஒரு பேஸ் பௌலிங் ஆல்-ரவுண்டர் விளையாடுவார்களா என்பதுதான் மிக முக்கியமானது. அந்த ஏழாவது மற்றும் எட்டாவது ஸ்பாட், குறிப்பாக பேஸ் பௌலிங் ஆல்-ரவுண்டர் இடம், நியூசிலாந்து தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்பட மிகவும் க்ரிட்டிகலானது” என்று கூறி இருக்கிறார்..






