பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என சமன் செய்தது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணிக்கு கேப்டன் ஷான் மசூத் 87 ரன்கள், சவுத் ஷகீல் 66 ரன்கள் எடுத்தார்கள். பாகிஸ்தான அணி முதல் இன்னிங்ஸில் 333 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. கேசவ் மகாராஜ் 7 விக்கெட் வீழ்த்தினார்.
கடைசி ஜோடி அபாரம்
இதைத் தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு மேல் வரிசையில் டோனி டி சோர்ஸி 55 ரன் எடுத்தார். கீழ் வரிசையில் கடைசி விக்கெட்டுக்கு சேனுரான் முத்துசாமி 89 ரன், ரபாடா 71 ரன் குவித்தார்கள். தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 404 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் தரப்பில் ஆசிப் அலி ஆறு விக்கெட் வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி சுழல் பந்து வீச்சுக்கு சாதகமான சொந்த மைதானத்தில் இரண்டாவது இன்னிங்ஸில் 138 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது. பாபர் அசாம் சொந்த மண்ணில் ஆயிரம் ரன்கள் தாண்டி டெஸ்ட் கிரிக்கெட்டில் அரை சதம் அடித்து ஆட்டம் இழந்தார்.
தென் ஆப்பிரிக்கா எச்சரிக்கை
இதைத்தொடர்ந்து சொற்ப ரன் இலக்கை நோக்கி விளையாட்டிய தென் ஆப்பிரிக்க அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 73 ரன்கள் எடுத்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து ஒன்றுக்கு ஒன்று என டெஸ்ட் தொடரை சமன் செய்தது.
இதையும் படிங்க: 73 ரன்னில்.. மொத்த டீமையும் காப்பாற்றிய ரோகித் சர்மா.. ஸ்பெஷல் பிளானில் அசத்தல் – என்ன மாற்றம் நடந்தது?
இந்த போட்டியில் மூன்று ஸ்பின்னர் களை வைத்து சுழல் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்கா வீழ்த்தி இருக்கிறது. மேலும் இப்படியான ஆடுகளத்தில் பேட்டிங்கிலும் அபாரமாக விளையாடி இருக்கிறது. இதன் மூலம் அடுத்த இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை அமைக்க யோசிக்க வைக்கும் அளவுக்கு எச்சரிக்கை கொடுத்து இருக்கிறது.






