132 ரன்னில் சுருட்டி.. 139 ரன் வித்தியாசத்தில் வெற்றி.. தென் ஆப்பிரிக்கா அயர்லாந்து மேட்ச்சில் ரிவென்ச்

0
710
Ireland

தென் ஆப்பிரிக்கா அயர்லாந்து அணிகள் மோதிக்கொண்ட முதலாவது ஒருநாள் போட்டி அபுதாபியில் நடைபெற்றது. இந்த இரண்டு அணிகளும் இரண்டு வெள்ளை பந்து தொடர்களில் பொதுவான இடமான அபுதாபியில் மோதி வருவது குறிப்பிடத்தக்கது.

அயர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் முதலில் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதிக்கொண்டன. இதில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெல்ல இரண்டாவது போட்டியில் அயர்லாந்து வென்று பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்தது.

- Advertisement -

ரியான் ரிக்கெல்டன் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ்

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த தென் ஆப்பிரிக்க அணி ஒன்பது ஓவர்களில் 36 ரன்கள் எடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியில் சிக்கியது.

இந்த நிலையில் துவக்க ஆட்டக்காரர் ரியான் ரிக்கெல்ட்டன் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இருவரும் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார்கள். இந்த ஜோடி 155 பந்துகளில் 152 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. ரியான் ரிக்கெல்டன் 102 பந்துகளில் 91 ரன்கள், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 86 பந்தில் 79 ரன்கள் எடுத்தார்கள். தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்தது. அயர்லாந்து தரப்பில் மார்க் அடைர் 4, கிரேஜ் எங் 3 விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

தென் ஆப்பிரிக்கா ரிவென்ச்

இதைத்தொடர்ந்து விளையாடிய அயர்லாந்து அணி 31.5 ஓவரில் 132 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.அயர்லாந்து அணிக்கு பேட்டிங் வரிசையில் ஆறாவதாக வந்த டக்ரோல் 21 ரன்கள் அதிகபட்சமாக எடுத்தார். பால்பிரின் மற்றும் கர்டீஸ் கேம்பர் தலா 20 ரன்கள் எடுத்தார்கள்.

இதையும் படிங்க: வெஸ்ட் இண்டீஸ் ODI.. இங்கிலாந்து தனி அணி அறிவிப்பு.. வரலாற்று சிறப்பு வீரர் அறிமுகம்.. மேலும் 2 புதிய வீரர்கள்

இதை தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 139 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. மேலும் அயர்லாந்து அணியிடம் இரண்டாவது டி20 போட்டியில் தோல்வி அடைந்து வந்ததற்கு தற்பொழுது பதிலடி கொடுத்திருக்கிறது. தென் ஆப்பிரிக்க பந்து வீச்சு தரப்பில் லிசார்ட் வில்லியம்ஸ் நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -