வெஸ்ட் இண்டீஸ் ODI.. இங்கிலாந்து தனி அணி அறிவிப்பு.. வரலாற்று சிறப்பு வீரர் அறிமுகம்.. மேலும் 2 புதிய வீரர்கள்

0
768
Buttler

இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு ஜோஸ் பட்லர் தலைமையில் 14 பேர் கொண்ட அணியை அறிவித்திருக்கிறது.

இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அக்டோபர் 31 நவம்பர் 2 மற்றும் 6 ஆம் தேதிகளில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு தற்பொழுது இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

திரும்பி வந்த ஜோஸ் பட்லர்

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான வெள்ளை பந்து தொடர்களில் கேப்டன் ஜோஸ் பட்லர் காயம் காரணமாக விளையாடவில்லை. தற்போது வெள்ளை பந்து தொடர்களில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் செல்லும் இங்கிலாந்து அணியின் கேப்டன் பொறுப்புக்கு மீண்டும் ஜோஸ் பட்லர் திரும்பி வந்திருக்கிறார்.

மேலும் இந்த தொடர்பு இருக்கும் காலகட்டத்தில் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஜோஸ் பட்டர் தலைமையில் வெஸ்ட் இண்டீசில் ஒரு அணி தனியாக வேலைப்பந்த தொடர்களில் விளையாடும்.

- Advertisement -

வரலாற்று சிறப்புமிக்க அறிமுக வீரர்

ஒருநாள் தொடருக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் இங்கிலாந்து அணியில் தெற்காசிய கிரிக்கெட் அகாடமியில் இருந்து முதல் முறையாக இளம் லெக் ஸ்பின்னர் ஜாபர் சோகான் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இங்கிலாந்தில் இருக்கும் தெற்காசியர்கள் இங்கிலாந்து அணியில் இடம்பிடிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட அகாடமியில் இருந்து வரக்கூடிய முதல் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த அணியில் டேன் மௌஸ்லி மற்றும் ஜான் டர்னர் என இரண்டு புதிய வீரர்கள் இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் அணியின் அறிமுகமாக இருக்கிறார்கள். மேலும் தற்போது 14 வீரர்கள் கொண்ட அணி மட்டுமே அறிவிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : என் நோட்புக் கொண்டாட்டம்.. விராட் அப்புறம் என்னை விடவே இல்ல.. முடிச்சு விட்டுட்டாரு – கேஸ்ரிக் வில்லியம்ஸ் பேட்டி

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இங்கிலாந்து அணி :

ஜோஸ் பட்லர் (கே), ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜேக்கப் பெத்தேல், ஜாபர் சோஹன், சாம் கர்ரன், வில் ஜாக்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன், சாகிப் மஹ்மூத், டான் மௌஸ்லி, ஜேமி ஓவர்டன், அடில் ரஷித், பில் சால்ட், ரீஸ் டாப்லி மற்றும் ஜான் டர்னர்.

- Advertisement -