INDvsSA.. தென் ஆப்பிரிக்கா வெற்றி.. இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணம் என்ன?

0
1662
Rinku

இந்திய தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே முதல் டி20 போட்டி மழையால் ரத்தாகி இருந்த நிலையில் இன்று இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீச தீர்மானித்தது. இந்திய அணியில் ருதுராஜை வெளியில் வைக்கப்பட்டு சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் இந்த முறை இந்திய துவக்க ஆட்டக்காரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் கில் இருவரும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக ரன் ஏதும் இல்லாமல் வெளியேறினார்கள். மூன்றாவது இடத்தில் வந்த திலக் வருமா 20 பந்தில் 29 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த சூரியகுமார் யாதவ் மிகச் சிறப்பாக விளையாடி 36 பந்துகள் சந்தித்து ஐந்து பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் என 56 ரன்கள் நொறுக்கி ஆட்டம் இழந்தார்.

இன்னொரு முனையில் பொறுப்பை எடுத்துக் கொண்ட ரிங்கு சிங் 39 பந்துகளில் ஒன்பது பவுண்டரிகள் இரண்டு சிக்ஸர்கள் உடன் 68 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றார். ரவீந்திர ஜடேஜா 14 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இந்திய அணி 19.3 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதற்கு அடுத்து சிறிது நேரம் மழை பெய்து நின்றதற்குப் பிறகு, தென் ஆப்பிரிக்க அணிக்கு 15 ஓவர்களில் 152 ரன்கள் என்கின்ற இலக்கு மாற்றி கொடுக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்க தரப்பில் ஜெரால்டு கோட்சி 3 விக்கெட் கைப்பற்றி இருந்தார்.

தென் ஆப்பிரிக்க அணிக்கு துவக்கம் அதிரடியாக அமைந்தது. அந்த அணியின் மேத்யூ பிரட்ஸ்கி ஏழு பந்தில் 16 ரன்கள் எடுக்க, மூன்றாம் இடத்தில் வந்த கேப்டன் மார்க்ரம் 17 பந்தில் 30 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இன்னொரு முனையில் ரீஸா ஹென்றிக்ஸ் அதிரடியில் மிரட்டி 27 பந்தில் 49 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதற்கு அடுத்து ஹென்றி கிளாஸன் 7, டேவிட் மில்லர் 14 ரன்கள் எடுத்து வெளியேற ஆட்டத்தில் கொஞ்சம் பரபரப்பு ஏற்பட்டது. கடைசி இரண்டு ஓவர்களுக்கு 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ரவீந்திர ஜடேஜா வீசிய 14வது ஓவரில் தென் ஆப்பிரிக்கா வெற்றிக்கான ரன்னை அடித்தது. களத்தில் ஆட்டம் இழக்காமல் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 14, ஆன்டி பெலுக்வாயோ 10 ரன்கள் எடுத்தார்கள்.

இந்திய அணியின் தரப்பில் முகேஷ் குமார் இரண்டு விக்கெட், சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள். போட்டி நடைபெற்ற மைதானத்தில் மழை நீர் வடிவதற்கான வசதிகள் சிறப்பாக இல்லை. இதன் காரணமாக ஆடுகளத்தில் மேற்பரப்பில் தண்ணீர் நிறைய இருந்தது. இதனால் ஊறிய பந்தை வைத்து பந்து வீசுவது பெரிய கடினமாக மாறியது. இந்திய அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக இதுவே அமைந்தது.