தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர்.. விலகிய இந்திய நட்சத்திர வீரர்.. மாற்று வீரர் உடனடி அறிவிப்பு!

0
2751
ICT

இந்திய அணி தற்போதைய தனது தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் மூன்று கேப்டன்களின் தலைமையில் மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுகிறது.

சூரியகுமார் யாதவ் தலைமையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை முடித்துக் கொண்டு, கேஎல் ராகுல் தலைமையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தற்பொழுது விளையாடி வருகிறது.

- Advertisement -

டிசம்பர் ஆறாம் தேதி பாக்சிங் டே நாளில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி விளையாடுகிறது.

இதற்காக அறிவிக்கப்பட்ட அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக இருக்கிறார். மேலும் விராட் கோலி, கே.எல். ராகுல் ஸ்ரேயாஸ் ஐயர், ருத்ராஜ், கில் ஆகியோர் இடம் பெற்று இருக்கிறார்கள். வழக்கம்போல் பந்துவீச்சில் பும்ரா, சமி சிராஜ் ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் நேற்று காலில் காயம் காரணமாக முகமது சமி தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டது. இவருடைய இடத்திற்கு மாற்று வீரர் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.

முகமது சமியின் விலகல் பின்னடைவாக பார்க்கப்பட்ட நேரத்தில், தற்பொழுது அணியில் இரண்டாவது விக்கெட் கீப்பராக இடம் பெற்று இருந்த இஷான் கிஷான், தனிப்பட்ட காரணங்களுக்காக தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இருந்து விலகி இருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இசான் கிஷான் விலகி இருக்கின்ற காரணத்தினால், அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் கேஎஸ்.பரத் சேர்க்கப்படுகிறார் என்கின்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.

- Advertisement -