400 ரன் சாதனை.. இன்னொரு தடவை நீங்க இந்த மாதிரி செய்யவே கூடாது.. முல்டரிடம் வருந்திய ஜாம்பவான் லாரா

0
213

ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய தென்னாபிரிக்க அணி இரண்டிலும் சிறப்பான வெற்றியை பதிவு செய்து டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.

இந்த சூழ்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முச்சதம் அடித்து மேற்கொண்டு விளையாடாமல் டிக்ளர் செய்தது குறித்து வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் ஜாம்பவான் பிரைன் லாரா சில முக்கிய விஷயங்கள் பேசியதாக தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர் சில விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை தென்னாப்பிரிக்க அணி கைப்பற்றிய நிலையில் வியான் முல்டர் தலைமையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை ஜிம்பாப்வேவில் விளையாடியது. முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி பெற்றிருந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து 626 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. அப்போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்த கேப்டன் முல்டர் 367 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தார்.

அவரது அறிவிப்பு பலரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 400 ரன்கள் குவித்த வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் லாராவின் சாதனையை முறியடிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் ஜாம்பவானின் சாதனை அப்படியே இருக்க வேண்டும் என்று தான் விரும்பியதாக டிக்ளர் செய்து அறிவித்தார். இது பலரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும் பலரிடையே பாராட்டையும் பெற்றது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இதுகுறித்து முல்டரிடம் பேசிய வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரைன் லாரா, இன்னொரு முறை நான் அந்த நிலையில் இருந்தால் அவர் அடித்திருந்ததை விட அதிக ரன்கள் அடிக்க வேண்டும் என கேட்டதாக தென்னாபிரிக்க கேப்டனிடம் கூறியதாக முல்டர் தற்போதைய பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். மேலும் எதற்காக அத்தகைய சாதனையை உருவாக்காமல் விட்டீர்கள் என கேட்டார் எனவும் தென் ஆப்பிரிக்க கேப்டன் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:கேப்டனா கில் வேற லெவல்ல இருக்காரு.. அதுக்கு முக்கிய காரணமே இதுதான் – சச்சின் வெளியிட்ட தகவல்

இது குறித்து தென் ஆப்பிரிக்கா கேப்டன் முல்டர் கூறும் போது “இரண்டாவது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு நான் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் லாராவிடம் பேசினேன். அவர் என்னிடம் பேசும் போது 400 ரன்கள் சாதனையை நெருங்கி இருக்க வேண்டும் என கூறினார். ஒருவேளை நான் மீண்டும் அந்த நிலையில் இருந்தால் அவர் செட் செய்திருந்த ரன்களை விட அதிக ரன்கள் அடிக்க வேண்டும் என்று என்னிடம் கேட்டார்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -