2வது டெஸ்ட்.. நியூசிலாந்துக்கு தண்ணி காட்டும் அனுபவம் இல்லாத தென் ஆப்ரிக்கா.. முதல் நாளில் அபார ஆட்டம்

0
675
Rachin

தென் ஆப்பிரிக்காவில் பிரான்சிசைஸ் டி20 கிரிக்கெட் தொடர் சில நாட்களுக்கு முன்பாக நடைபெற்ற முடிவுக்கு வந்தது. சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் அண்ட் கேப் அணி இரண்டாவது முறையாக தொடர்ந்து சாம்பியன் பட்டத்தை வென்று இருக்கிறது.

இந்தத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்த காரணத்தினால், முன்னணி வீரர்கள் அனைவரும் இந்த தொடரில் விளையாட, அனுபவம் இல்லாத இளம் வீரர்களை கொண்ட அணி நியூசிலாந்துக்கு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட அனுப்பி வைக்கப்பட்டது.

- Advertisement -

இந்த தொடரின் முதல் போட்டியில் கேன் வில்லியம்சன் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் அடிக்க, சச்சின் ரவீந்தரா இரட்டை சதம் அடித்து அட்டகாசப்படுத்தினார். வெகு எளிதாக அனுபவம் இல்லாத தென் ஆப்பிரிக்க அணியை நியூசிலாந்து வீழ்த்தியது.

இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி தைரியமாக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

துவக்க ஆட்டக்காரராக வந்த தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் நீல் பிராண்ட் 25, வான் டோன்டர் 32, ஹம்சா 20, பெடிங்காம் 32 ரன்கள் எடுத்தார்கள். கீகன் பீட்டர்சன் 2, பார்ட்டியூன் 0 என மீண்டும் ஏமாற்றினார்கள்.

- Advertisement -

தென் ஆப்பிரிக்க அணி ஒரு கட்டத்தில் 150 ரன்கள் எடுத்து ஆறு விக்கெட்டுகளை இழந்து மீண்டும் சீக்கிரத்தில் ஆல் அவுட் ஆகும் என்பது போல தெரிந்தது.

ஆனால் இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த ருயான் டி ஸ்வார்ட் 55, வோன் பெர்க் 32 எனது தாக்குப்பிடித்து விளையாடி ஆட்டம் இழக்காமல் களத்தில் நிற்க, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்திருக்கிறது. நியூசிலாந்து தரப்பில் ரச்சின் ரவீந்தரா மூன்று விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்.

இந்த தொடருக்கு அனுப்பப்பட்ட பெரும்பாலான வீரர்கள் முதல் முதலில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாட என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கீகன் பீட்டர்சன் மட்டுமே மற்றவர்களை விட சில டெஸ்ட் போட்டிகள் சேர்த்து விளையாடி இருக்கிறார்.

இதையும் படிங்க : “இந்திய மீடியாக்கள் என்னென்ன சொன்னிங்க?.. இந்திய அணி இங்கிலாந்த பார்த்து பயப்படுது” – இயான் பெல் அதிரடி பேச்சு

தற்பொழுது இந்த அனுபவம் மற்ற தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் பலமான நியூசிலாந்துக்கு எதிராக, முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்தது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.