இங்கிலாந்தின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் இயான் பெல்லும் ஒருவர். கிரிக்கெட்டில் கவர் டிரைவர் ஷாட்கள் என்பது ஒரு பேட்ஸ்மேனின் திறமையை அளக்கும் ஷாட்டாக பார்க்கப்படுகிறது.
இந்த வகை ஷாட்களில் இயான் பெல் ஒரு மாஸ்டர். 2005 ஆம் ஆண்டு ஆசஸ் தொடரில் இங்கிலாந்தில் வைத்து அசுர பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணியை வென்ற பொழுது விளையாடியவர் இவர்.
தற்பொழுது இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இந்தியாவில் விளையாடும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர், இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையிலேயே பல மாற்றங்களை கண்டு வருகிறது. இதன் காரணமாக சுவாரசியம் கூடியிருக்கிறது.
இந்திய அணியில் விராட் கோலி கேஎல் ராகுல் ரவீந்திர ஜடேஜா போன்றவர்கள் விளையாட முடியாமல் இருக்கிறார்கள், இங்கிலாந்து தரப்பில் அனுபவ சுழற் பந்துவீச்சாளர் ஜாக் லீச் காயத்தால் வெளியேறிவிட்டார். எனவே அனுபவம் மற்ற சுழற் பந்துவீச்சு படை மட்டுமே இங்கிலாந்திடம் இருக்கிறது. அதே சமயத்தில் இந்திய அணியிடம் அனுபவம் மற்ற பேட்டிங் யூனிட் இருக்கிறது.
இந்த இரண்டு தரப்பும் மோதிக் கொள்ளும் போட்டியில் எந்த யூனிட் வெற்றி பெறுகிறது? என்பது சுவாரசியமான ஒன்றாக மாறியிருக்கிறது. மேலும் இங்கிலாந்து தொடருக்கு ஒதுக்கப்பட்ட எல்லா மைதானங்களும் வழக்கமான இந்திய டெஸ்ட் மைதானங்கள் கிடையாது. எனவே இங்கு பந்து பெரிய அளவில் சுழன்று திரும்பவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தத் தொடர் குறித்து பேசி உள்ள இயான் பெல் கூறும்பொழுது “இந்திய ஊடகங்கள் இந்த தொடர் தொடங்கப்படுவதற்கு முன்பாக இந்திய அணி 5 போட்டிகளை வெல்லும் என நினைத்திருந்தார்கள். ஆனால் இந்திய அணி இங்கிலாந்து அணியை பார்த்து கவலைப்படுகிறது. இது உண்மையில் மிகவும் நல்ல விஷயம். தொடரில் இந்தியாவைப் பின் தள்ள இங்கிலாந்து சில நல்ல பஞ்ச் செய்தது.
இது மீண்டும் தொடர போகிறது. முதல் ஆட்டத்தில் போப் ஒரு பெரிய சதத்தை அடித்து ஆட்டத்தை திருப்பினார். இப்படியான விஷயங்கள்தான் அணியை போட்டுக்குள் கொண்டு வரும்.
இந்திய அணிக்கு அற்புதமான திறமைகள் கிடைத்திருக்கிறார்கள். அவர்களிடம் திறமை இல்லை என்பது கிடையாது. அதே சமயத்தில் அவர்களிடம் சந்தேகங்கள் இருக்கிறது. அவர்கள் இந்த இங்கிலாந்து அணியை பார்த்து அச்சப்படுகிறார்கள்.
இதையும் படிங்க : “10 கிலோ உடல் எடை போச்சு.. 2022 ரொம்ப மோசமா அமைஞ்சது” – இந்திய அணிக்கு தேர்வான தேவ்தத் படிக்கல் பேச்சு
தற்பொழுது இந்த டெஸ்ட் தொடரில் இரு அணிகளுமே சமநிலையில் இருக்கின்றன. ஆனாலும் இந்தியா மீது கொஞ்சம் கூடுதல் அழுத்தம் இருக்கிறது. முதல் டெஸ்டில் போப் செய்ததை யாராவது மீண்டும் செய்தால் இந்திய அணிக்கு பெரிய அழுத்தத்தை உருவாக்க முடியும்” எனக்கூறி இருக்கிறார்.