தென்னாப்பிரிக்க டி20 கேப்டன் பதவியிலிருந்து பவுமா அதிரடி நீக்கம்.. 2 அணிகள் அறிவிப்பு

0
1101

தென்னாப்பிரிக்க அணியின் டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து பவுமா அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இம்மாத இறுதியில் மேற்கிந்தியத் தீவுகளை எதிர்கொள்ளும் அணியில் இருந்து முன்னாள் கேப்டன் டெம்பா பவுமா நீக்கப்பட்ட நிலையில், தென்னாப்பிரிக்காவின் இருபது20 சர்வதேச அணியின் புதிய கேப்டனாக எய்டன் மார்க்ரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

பவுமா அதற்கு பதிலாக டெஸ்ட் மற்றும் ஒரு நாள் சர்வதேச கேப்டனாக தனது பங்கில் கவனம் செலுத்துவார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான புதன்கிழமை இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து மார்ச் 16-21 க்கு இடையில் மூன்று ஒருநாள் போட்டிகள் தொடர் நடைபெற உள்ளது.

வேகப்பந்து வீச்சாளர்களான அன்ரிச் நோக்கியா  மற்றும் ககிசோ ரபாடா ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் மார்ச் 25-28 வரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராம நடைபெறும் டி20 போட்டிகளுக்கு  திரும்புவார்கள்.  ஜெரால்ட் கோட்ஸி, மற்றும் பேட்டர்கள் டோனி டி ஸோர்ஸி மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் 50 ஓவர் அணிக்கு முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

,அதே நேரத்தில் ரியான் ரிக்கல்டனுக்கு உள்ளூர் போட்டியில் நன்றாக விளையாடியதன்  மூலம் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. டி20 அணியில் ஸ்பின் ஆப்ஷனாக ஜார்ன் ஃபோர்டுயின் சேர்க்கப்பட்டுள்ள நிலையில். கேசவ் மஹாராஜ்க்கு வாய்ப்பு இல்லை. இதே ராஸ்ஸி வான் டெர் டஸ்ஸனுக்கு. அணியில் இடமில்லை.

- Advertisement -

ஒருநாள் அணி  அணி:  டெம்பா பவுமா (கேப்டன்), ஜெரால்ட் கோட்ஸி, குயின்டன் டி காக், டோனி டி ஜோர்ஜி, ஜார்ன் ஃபோர்டுயின், ரீசா ஹென்ட்ரிக்ஸ், சிசண்டா மாகலா, கேசவ் மஹராஜ், வியான் முல்டர், லுங்கி என்கிடி, ரியான் ரிகல்டன், ஆண்டிலே பிலோக்வாலியா,ஸ்டப்ஸ், லிசாட் வில்லியம்ஸ், ராஸ்ஸி வான் டெர் டுசென்.

டி20 அணி:  மார்க்ரம் (கேப்டன்), குயின்டன் டி காக், பிஜோர்ன் ஃபோர்டுயின், ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், ஹென்ரிச் கிளாசென், சிசாண்டா மகலா, டேவிட் மில்லர், லுங்கி நிகிடி, அன்ரிச் நோக்கியா, வெய்ன் பார்னெல், ககிசோ ரபாடா, ரைலி தஸ்ப்ராஸ்டோவ், ரிலீஸ்