நாங்க ஈசியா பைனல்க்கு வரல.. இந்திய அணி மாதிரி அந்த ஆசை இருக்கு.. வாகனின் கருத்துக்கு பவுமா பதிலடி

0
693

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக தென்னாப்பிரிக்க அணி பாகிஸ்தானை வீழ்த்தி முன்னேறி இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகனின் கருத்துக்கு தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா தற்போது பதிலடி கொடுத்திருக்கிறார்.

- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர் உலக கிரிக்கெட் நாடுகளின் மத்தியில் நடைபெற்று வரும் நிலையில் தற்போது தென்னாப்பிரிக்க அணி தொடர்ச்சியாக ஆறு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறது. குறிப்பாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் த்ரில்லர் வெற்றி பெற்று முதல் முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. தென்னாபிரிக்க அணி சமீபகாலமாகவே சிறப்பாக செயல்பட்டு அனைத்து ஐசிசி தொடரிலும் சிறப்பாக செயல்பட்டு இறுதிப்போட்டி வரை முன்னேறி வருகிறது.

இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் தென் ஆப்பிரிக்க அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய விதம் மற்ற அணிகளை காட்டிலும் எளிதாக அமைந்திருப்பதாக கூறி இருந்தார். இந்த சூழ்நிலையில் தற்போது பேட்டி அளித்த தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா மைக்கேல் வாகனின் கருத்துக்கு பதிலடி கொடுத்து பேசி இருக்கிறார். அதாவதுநாங்கள் எளிதாக இறுதி போட்டிக்கு வரவில்லை என்றும், போராடித்தான் வந்திருக்கிறோம் என சில கருத்துக்களை பேசி இருக்கிறார்.

- Advertisement -

கற்பனையில் கூட நினைக்க முடியாது

இது குறித்து அவர் கூறும் பொழுது “மற்றவர்களின் கருத்துக்கள் மற்றும் திட்டமிடல் குறித்து நாங்கள் எதையும் கொண்டு வரவில்லை. உலகில் உள்ள மற்ற மூன்று நாடுகளைப் போலவே ( இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா) நாங்களும் இன்னும் நிறைய கிரிக்கெட் விளையாடவே விரும்புகிறோம். நாங்கள் செயல்பட்ட விதத்தில் இன்னும் பல போட்டிகளில் விளையாடுவோம் என்று நம்புகிறோம்.எங்களால் முடிந்த அளவு சிறப்பாக விளையாடி வருகிறோம். வீரர்கள் ஆகிய நாங்கள் முன்னாள் வீரர்களின் கருத்துக்கள் எதிர்மறையான கருத்துக்கள், விமர்சனங்கள் போன்றவற்றில் ஈடுபடுவதில்லை என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க:அஸ்வின் எடுத்தது சுயநல முடிவு.. இதை பிசிசிஐ அனுமதித்திருக்க கூடாது – தென் ஆப்பிரிக்கா முன்னாள் வீரர் விமர்சனம்

இந்த நிலைக்கு நாங்கள் வந்திருப்பதை நிச்சயம் எளிதாக அமைந்ததாக நான் நினைக்க மாட்டேன். நாங்கள் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடும் போது வெற்றி பெற மிக கடுமையாக போராடினோம். அப்போது அந்த இடத்தில் இருந்து நாங்கள் அனைத்து போட்டிகளையும் வென்று வருகிறோம். எனவே கற்பனையில் கூட நான் இதை எளிதாக அமைந்ததாக நினைக்கவில்லை. நாங்கள் எங்களது சொந்த மண்ணில் அல்லது வெளிநாட்டில் விளையாடும்போது கூட கடுமையாகவே போராடி இருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -