அஸ்வின் எடுத்தது சுயநல முடிவு.. இதை பிசிசிஐ அனுமதித்திருக்க கூடாது – தென் ஆப்பிரிக்கா முன்னாள் வீரர் விமர்சனம்

0
503

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக நாளை ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற இந்திய அணி மிகத் தீவிரமாக தயங்கி வருகிறது.

இந்த சூழ்நிலையில் தென் ஆப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் டேரில் கல்லினன் ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது ஒரு சுயநல நடவடிக்கை என்று விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -

அஸ்வின் செய்தது சுயநல நடவடிக்கை

ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய கிரிக்கெட் அணியின் மிகச் சிறந்த வீரராக திகழ்ந்தாலும் அவரது சமீபத்திய ஃபார்ம் சில தொடர்களில் சரியாக அமையவில்லை. இந்த நிலையில் அவருக்கு மாற்றுவீராக நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் இந்திய அணிக்கு திரும்ப அழைக்கப்பட்டார். இது ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு ஓய்வு பெறுவதற்கு ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு போட்டியில் விளையாடினாலும் மூன்றாவது போட்டியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

அவருக்கு பதில் மாற்றுவீராக இருந்த வாஷிங்டன் சுந்தர் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார். இந்த சூழ்நிலையில் இதுவே சரியான நேரம் என்று கருதி ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வினை அறிவித்தார். இது தற்போது அதிர்ச்சியான விஷயமாக பார்க்கப்படக்கூடிய நிலையில் தென்னாபிரிக்க முன்னாள் வீரர் டேரில் கல்லினன் அஸ்வின் ஓய்வு பெற்றது ஒரு சுயநலமான நடவடிக்கை என்று சில முக்கிய கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

அஸ்வின் இதை செய்திருக்கக் கூடாது

இது குறித்து அஸ்வின் கூறும் பொழுது “அஸ்வினை ஓய்வு பெற அனுமதித்திருக்கக் கூடாது. அப்படியே இருந்தாலும் அவர் தொடரின் நடுப்பகுதியில் ஓய்வு பெற கூடாது. இது ஒரு சுயநலமான நடவடிக்கையாகும். அஸ்வின் ஓய்வு பெற்றது அவர் தேர்ந்தெடுக்கப்படாததற்கு செய்த வெறுக்கத்தக்க விஷயமாகும். இது நடைபெற்றிருக்கும் தொடருக்கு இடையில் ஓய்வு பெற்றிருப்பது இந்திய அணிக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் இருக்கலாம்” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க:ஓய்வு பெறும் போது.. என்னிடம் நானே கேட்கக் கூடிய விஷயம் இது மட்டும்தான் – கேப்டன் பும்ரா பேட்டி

மேலும் இந்திய அணியை சிட்னி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் இது இந்திய அணிக்கு ஒரு வெற்றிகரமான தொடராக இருக்கும் என்று வலியுறுத்த விரும்புகிறேன். சிட்னி டெஸ்டில் அவர்களால் ஏன் வெற்றி பெற முடியாது என்று தோன்றுகிறது. எனவே அடுத்த டெஸ்ட் போட்டியில் அவர்களால் வெற்றி பெற முடியும் என்று நினைக்கிறேன். ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது அவர் அடுத்ததாக ஒயிட் பால் கிரிக்கெட்டுக்கு வசதியாக இருக்கும் என்று நினைக்கிறேன்” என்று கூறுகிறார்.

- Advertisement -